(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“இந்த நேரத்துல வாடகை பத்தி என்ன பேச்சு டீச்சர்?” என்றாள் சத்யா இலகுவாக!

  

“இல்லை, அது சரியா இருக்காது,” என இப்போதும் தயங்கினாள் அஹல்யா.

  

“சரி, ஐயாயிரம் ரூபா தாங்க, ஓகேவா?”

  

“சரிங்க. ரொம்ப நன்றி!”

  

அஹல்யா சம்மதிக்கவும், அபினவ் குனாளனை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்றான். சக்தி தன் ஜீப்பில் அஹல்யாவையும், அருணையும் அவர்கள் வீட்டில் ட்ராப் செய்து விட்டு, சத்யாவுடன் அவள் வீட்டை நோக்கி சென்றாள்.

  

“சத்யா, நீ அஹல்யாக்கு கொடுக்குறேன்னு சொன்ன போர்ஷன் எது?” என வினவினாள் சக்தி.

  

“அன்னைக்கு நீ பார்த்தீயே அதே போர்ஷன் தான் சக்தி!”

  

“அடிப்பாவி, எனக்கு ஃபிப்டீன் தவுசன்ட்ன்னு சொன்னீயே??”

  

“உனக்கு அதுவே குறைச்சல், ட்வென்டி கேட்டிருந்திருக்கனும்!”

  

“பகல் கொள்ளைக்காரி சத்யா!!!!”

  

“ஹ்க்கும்!! இன்னைக்கு நடந்ததை என்னன்னு நினைக்குற சக்தி?”

  

“இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் அஹல்யா தான் கொலை செய்தான்னு முடிவே செய்துட்டார்ன்னு தோணுது. நான் நீ சொன்னது சரியா இருக்கும்னு நினைக்கிறேன். அஹல்யா உண்மையை தான் சொல்றா, உன் இன்ட்யூஷன் தான் சரின்னு எனக்கும் தோணுது!”

  

“யெஸ்!!” சத்யா மகிழ்ச்சியுடன் ட்ரைவ் செய்துக் கொண்டிருந்த சக்தியை சுற்றி கைகளை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.