”எந்த தப்பா இருந்தாலும் அதுக்காக இவங்களை அடிக்கறதா“
”என்ன செய்றது சார், தப்பு செய்த மாணவியை அடிக்கலாம்னா அதுக்கு சட்டம் தடையா இருக்கு, அப்ப மாணவி செய்த தப்புக்கு தூண்டுகோலா இருந்தவங்களைதானே தண்டிக்கனும் எந்த சட்டமும் மாணவியோட பெற்றோரை அடிக்க கூடாதுன்னு சொல்லலையே”
”இங்க என்ன பிரச்சனை அதை சொல்லுங்க அந்த மாணவிக்கு என்னாச்சி சரியா படிக்கலையா”
”மாணவி நல்லா படிக்கறா“
”பிறகென்ன”
”படிச்சா மட்டும் போதுமா”
”வேற என்ன வேணும்“
”ஒழுக்கம் வேணும்“
”இப்ப என்ன அவள் ஒழுக்கம் கெட்டது”
”கெடலை இப்படியே விட்டா கெட்டுடும், அதான் அவளுக்கு தண்டனை தராம அவளுக்கு தூண்டுகோலா இருந்தவங்களுக்கு தண்டனை தரேன்”
”போதும் என்ன பிரச்சனை விளக்கமா சொல்லு நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல கண்ணகி அந்த மாணவியின் பையில் இருந்து சில புத்தகங்களை எடுத்து ஹெச் எம்மிடம் காட்ட அதை வாங்கிப் பார்த்து அதிர்ந்தார், அனைத்துமே தப்பான புத்தகங்கள் அதைக்கண்டதும் அவருக்கே கோபம் எழுந்தது மாணவியைப் பார்த்து
”என்ன இதெல்லாம், இதான் நீ படிக்கற லட்சணமா கல்விபுத்தகத்தை படிக்க சொன்னா கலவி