(Reading time: 39 - 78 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

நடந்துக்கற”

  

”சே சே இல்லை சார் நான் பேர் புகழுக்காக இதையெல்லாம் செய்யலை சார் வருங்கால மாணவர்களோட கனவுகளுக்காக இப்படி செய்றேன் சார்”

  

“இப்படியெல்லாம் செய்தா உனக்கு என்ன பெரிசா கிடைக்கப் போகுது நல்லாசிரியர் விருதுதானே”

  

”எனக்கு விருது வேணாம் சார் என்னால சில மாணவர்கள் ஒழுக்கமாக மாறி நல்லபடியா படிச்சி பெரியாளாகி இந்த நாட்டுக்கு நல்லது செய்தா அதுவே எனக்கு கிடைக்கற மிகப்பெரிய விருது சார்”

  

”இப்ப என்ன செய்யலாம்ங்கற”

  

”பிரேயர் கூட்டுங்க சார் நான் எல்லா மாணவர்கள்கிட்டயும் பேசப் போறேன், தப்பு செய்யாதவங்களுக்கு இது தப்புன்னு தெரியும், தப்பு செய்தவங்களுக்கு திருந்துவதற்கு ஒரு தருணமா இருக்கும்”

  

”இதுக்கு நான் சம்மதிக்கலைன்னா”

  

”தப்பு செய்தவனை விட அந்த தப்பை செய்ய தூண்டினவன் தான் தண்டனைக்குரியவன் அதை விட அந்த தப்பை மறைக்க பார்க்கறவன் ரொம்ப ஆபத்தானவன்“

  

”என்னை ஆபத்தானவன்னு சொல்றியா“

  

”ஆமாம் சார் இந்த பிரச்சனையை இப்படியே விட்டா இன்னும் சில மாணவர்கள் தப்பான வழியில போவாங்க சார், இன்னிக்கு அந்த புத்தகத்தை படிக்கனும்னு ஆசைப்பட்டவங்க நாளைக்கு அதுல இருக்கறதை செய்யனும்னு யோசிச்சா நிலைமை மோசமாயிடும் சார், புரிஞ்சிக்குங்க எனக்கிருக்கற கடமையுணர்ச்சி கூட ஏன் உங்களுக்கு இல்லை, இங்க படிக்கற மாணவர்கள் எல்லாருமே உங்க பிள்ளைகள் போல, உங்க பிள்ளை தப்பு செய்தா அமைதியா இருப்பீங்களா சார்”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.