”உண்மைதான் இந்த கண்ணகி நம்ம கோவலனுக்கு ஏத்தவதான்”
”நீ என்ன சொல்ல வர்ற நான் கல்லூரியை பத்தி பேசறேன்“
”நானும் கல்லூரியை பத்திதான் சொல்றேன்”
”இல்லையே உன் பேச்சுல ஏதோ விசயம் பொதிஞ்சிருக்கே” என சொல்ல ஈஸ்வரமூர்த்தி விஷமமாக சிரித்துவிட்டு
”கண்ணகியை சீக்கிரமாவே நான் சந்திக்கனும், அவளை முதல்ல கல்லூரிக்கு பிரின்சிபால் ஆக்கனும், அடுத்து என் வீட்டுக்கு பிரின்சிபாலாக்கனும்” என சொல்ல இப்போதுதான் உதயமூர்த்திக்கு விளங்கியது
”ஓ நீ அப்படி வர்றியா இதுக்கு உன் பேரன் சம்மதிப்பானா”
”கோவலனுக்கு கண்ணகிதான் சரியா வருவா, நீ வேணா பாரு ஒரு நாள் நீயே என் முடிவை நினைச்சி பெருமைப்படுவ, இப்ப வா கிளம்பலாம்“ என சொல்ல உதயமூர்த்தியும் பலமாக தலையாட்டியபடியே அவருடன் கிளம்பிச் சென்றார்.
பள்ளியை விட்டு வெளியேறிய கண்ணகியோ நேராக தன் வீட்டிற்குச் சென்றாள். அப்பா அம்மா விபத்தில் இறந்த காரணத்தால் சிறுவயதிலேயே அவளை ஹோம்மில் சேர்த்திருந்தார்கள், அவ்விடத்திலேயே படித்து உலக அனுபவத்தை அறிந்து டீச்சரானாள், இப்போது தனியாக ஒரு வீடு எடுத்து தோழியுடன் தங்கியிருந்தாள். வேலை விட்டுவிட்டு கவலையின்றி கம்பீரமாக நடந்து வந்து சேர்ந்தாள். அந்நேரம் அவளின் தோழி மாதவி அதிசயமாக வீட்டில் இருந்தாள்
”மாதவி நீ என்ன இங்க இருக்க” என கண்ணகி வியப்புடன் கேட்க
”அதை நான் கேட்கனும் ஸ்கூல் டைம்ல நீ எப்படி இங்க“