”என்னை வேலையை விட்டு எடுத்துட்டாங்க”
”இதை நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான், நீ செய்ற நல்லதுக்கு நிச்சயமா இது போல நடந்தே தீரும்”
”வேலை போனதை நினைச்சி எனக்கு கவலையில்லை”
”தெரியுமே நீ என்னிக்கு எதை நினைச்சி கவலைப்பட்டிருக்க இதோட 3 இடத்தில இருந்து உன்னை வேலையை விட்டு அனுப்பிட்டாங்க அடுத்து எந்த பள்ளிக்கு வேலையில சேரப் போற”
”இல்லை நான் பேசாம ட்யூசன் சென்டர் வைக்கலாம்னு இருக்கேன், பள்ளிக்கு போனா இன்னொருத்தர் தலைமையில வேலை செய்யனும், அவங்க நம்ம மேல அதிகாரம் காட்டுவாங்க, நாம செய்ற நல்லதை செய்ய விடமாட்டாங்க, அதை விட நானே ஒரு சென்டர் ஆரம்பிச்சிட்டா யாரும் என்னை அதிகாரம் செய்ய மாட்டாங்க என்ன சொல்ற மாதவி“
”சரியான யோசனை கண்ணகி ஆனா அதுக்கு நிறைய பணம் செலவாகுமே“
“இதுவரைக்கும் நான் வாங்கின சம்பளத்தை கொஞ்சம் கொஞ்சமா செலவு போக மீதியை சேர்த்து வைச்சிருக்கேன், அதை வைச்சி முதல்ல சின்னதா ட்யூசன் சென்டர் வைக்கிறேன் அப்புறம் மாணவர்கள் சேர சேர பெரிசாக்கறேன்”
”ஆல் த பெஸ்ட் கண்ணகி”
”சரி என்னை விடு நீ என்ன இந்நேரத்தில வீட்ல இருக்க கம்பெனிக்கு போகலையா”
”போனேன்” என்றாள் சலிப்பாக
”என்னாச்சி வேலை போயிடுச்சா“