”அப்ப உன் வேலையை முடிச்சிட்டு உன் திறமையை காட்டிட்டு வா, கண்டிப்பா உன் முதலாளி உன்னை பகைச்சிக்க மாட்டாப்ல, உன்னைப் போல திறமைசாலிகளை எந்த முதலாளியும் இழக்க மாட்டாங்க, நம்பிக்கையோட இரு”
”எனக்கென்ன கண்ணகி இந்த வேலை போனா இன்னொரு வேலை அவ்ளோதான்”
”அப்படி செய்யாத நாம செய்ற வேலையில நாம உறுதியா நிலைச்சி நிக்கனும்”
”நீ மட்டும் வேலையை விட்டு வந்த”
”நானா வரலை என்னை வரவேணாம்னு சொல்லிட்டாங்க”
”அப்ப என்னையும் வரவேணாம்னு சொல்லிட்டா அப்போ”
”அப்ப கிளம்பி வந்துடு, வேற வேலையை பாரு அதுக்காக கிளம்பி வரனும்ங்கற மாதிரி வேலையை செய்யாத, ஒழுங்கா செய்”
”சரிடியம்மா உடனே பாடம் எடுக்காத இதோ நான் கிளம்பிட்டேன்” என சொல்லிவிட்டு அவள் கம்பெனிக்குச் சென்றாள்.
மாதவி சென்ற அரை மணி நேரம் கழித்து கண்ணகியை தேடிக்கொண்டு வந்தார் உதயமூர்த்தி. அவரை அறியாத கண்ணகியும் அவரை மரியாதையுடன் வரவேற்று இருக்கையில் அமர வைத்தாள்
”சொல்லுங்க சார் யார் நீங்க”
”ஆச்சர்யமா இருக்கு என்னை பத்தி நீ தெரிஞ்சிக்காம போயிருக்க”
”சாரி சார் நிஜமாவே எனக்குத் தெரியாது”