வீட்டிற்கு வந்ததும் கண்ணகி சுவையான இனிப்பு பலகாரத்தை செய்திருந்தாள் அந்த வாசம் மாதவியை ஈர்த்தது
”வாவ் கண்ணகி என்ன செய்ற ஓ ஸ்வீட்டா வாவ் பார்க்கறப்பவே சூப்பரா இருக்கே சாப்பிட்டா எப்படியிருக்கும்”
”அப்ப சாப்பிட்டுப்பாரு”
”ஓ தாராளமா கொடு கொடு ஒரே பசி” என சொல்லி ஸ்வீட் வாங்கி சாப்பிடலானாள்.
”என்னாச்சி மாதவி வேலை முடிஞ்சதா”
”ஆமாம் கண்ணகி ப்ராஜெக்ட் முடிச்சிட்டு அதை முதலாளிகிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன்”
”ஓ அப்படியா சந்தோஷம் ஆமா உன் முதலாளி என்ன சொன்னாரு”
”ஆமா அவர் அதிகமா யார்கிட்டயும் பேசினதில்லை வழக்கம் போலதான் குட் யூ கேன் கோன்னு சொன்னாரு, அதோடு அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன் ஒரே டயர்டா இருக்கு கண்ணகி”
”போய் ஓய்வெடு மாதவி”
”ஆமா எதுக்கு ஸ்வீட் செய்த என்ன விசயம் உனக்கு வேலை போனதுக்காக ட்ரீட் வைக்கிறியா”
”இல்லை மாதவி வேலை கிடைச்சதுக்காக”
”வேலை கிடைச்சதா எப்படி” என கேட்க அவளும் நடந்ததை சொல்ல மாதவி வியநதாள்
”ஓ பரவாயில்லையே உன்னோட பேர் கோவை முழுக்க பிரபலமாகியிருக்கே”