அந்த கல்லூரி விட்டுப் போனா உனக்கு இந்த வீட்ல இடம் இல்லை”
”என்னை விட அவங்கதான் முக்கியமா உங்களுக்கு”
”ஆமாம் அதோட அவங்களுக்கு நான் எல்லா உரிமைகளையும் கொடுத்திருக்கேன் அவங்க எடுக்கற எல்லா முடிவுக்கும் நீ கட்டுப்படனும்“
”தாத்தா இது அநியாயம்“
”இதப்பாரு கல்லூரி மேல ஏகப்பட்ட புகார்கள் வருது இப்படியே போனா கல்லூரி பேர் கெட்டுடும்”
”நான் சரியாக்கறேன்“
”சரியா இருந்த கல்லூரியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே நீதானே மறுபடியும் நீ உள்ள நுழைஞ்சி இன்னும் கல்லூரியை மோசமாக்கி அதை மூட வைச்சிடாத, கெஞ்சி கேட்கறேன் தாளாளர் பதவியில நீ இரு பிரின்சிபால் பதவியில இருக்கறவங்க என்ன செய்தாலும் தடுக்காத”
“நான் அவங்களுக்கு துணையா இருக்கனுமா“
”வேணாம் அவங்களுக்கு யாரோட துணையும் தேவையில்லை“
”ஒரு ஆம்பளைக்கு இன்னொரு ஆம்பளை உதவ கூடாதா”
”வர்றது ஆம்பளை இல்லை ஒரு பொண்ணு”
”என்னது பொண்ணா” என அலறியவன் அடுத்த நொடியே
”இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்“