”எதுக்காக பார்க்க வந்தீங்க உங்க கல்லூரியில அவங்க வேலை செய்யனுமா”
”ஆமாம்”
”அப்பாடி தாராளமா அவங்களை கூட்டிட்டுப் போயிடுங்க ப்ளீஸ்“
”ஏன் இப்படி பேசறீங்க அவங்க நல்ல டீச்சர் இல்லையா”
”நல்ல டீச்சர்தான் அநியாயத்துக்கு நல்லவங்க அதுதான் இங்க பிரச்சனையே“
”புரியலையே”
”புரியும் அவங்களோட செயல்களை பார்த்தா உங்களுக்கே புரியும்”
”சரி நாங்க அவங்களை பார்க்கலாமா”
”இதோ இப்பவே வர சொல்றேன்” என சொல்லியவர் அங்கு டேபிள் மீதிருந்த பெல்லை அழுத்த ப்யூன் ஓடிவந்து நின்றான்
”கண்ணகி டீச்சரை வர சொல்லு“ என சொல்ல ப்யூனே பயந்தான்
”சார் நானா“
”ப்ச் கண்ணகி டீச்சரை பார்க்கதான் இவங்க வந்திருக்காங்க போ போய் அவங்களை கூட்டிட்டு வா” என சொல்ல ப்யூனோ அச்சத்துடனே வெளியே சென்றான்.
சென்ற 5 நிமிடத்தில் பதறிக் கொண்டு ஓடிவந்து நின்றான்
”சார் சார்”