”என்னடா நீயும் என்னவோ என்னை பயமுறுத்தற, வீட்டு பொறுப்பெல்லாம் ஒரு விசயமே இல்லை வெளி வேலைதான் கஷ்டமே பார்த்துக்கிட்டே இரு, உன் அன்பான தங்கச்சி எப்படி கஷ்டப்பட்டு வந்து நிக்கப் போறாள்ன்னு”
”உனக்கு எல்லாம் பட்டாதான்டா புரியும் நான் தங்கச்சிகிட்ட போறேன்”
”எதுக்கு அவளுக்கு உதவி செய்றதுக்கா, தேவையில்லை நீ என்கூடதான் இருக்கனும் என்னோட வா குளிச்சிட்டு வீட்டு பொறுப்புகளை கவனிக்கலாம்” என அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.
காவேரியும் தன் தந்தையிடம் சொல்லிவிட்டு தோப்புக்குச் சென்றாள். முதலாளியம்மா என்பதால் அங்கு வேலை செய்யும் அனைவரும் அவளுக்கு மதிப்பளித்தார்கள், மரியாதை தந்தார்கள் அவள் சொல்லும் கட்டளைகளுக்கு இணங்கி வேலை செய்தார்கள், நேரம் போவதே தெரியவில்லை அந்த வேலை இந்த வேலை என ஆரம்பித்து சில்லறை வேலைகள் முதல் பெரிய பெரிய வேலைகள் வரை செய்து முடிப்பதற்குள் மாலை நெருங்கிவிட்டது அவளும் சோர்ந்துவிட்டாள், அத்தோடு அவள் கிளம்பி வீடு வந்தாள்
”அப்பப்பா என்ன வேலை என்ன வேலை, ஷ்ஷ்ஷ் ஆனாலும் நல்லா ஜாலியாதான் இருக்கு, ஆமா கொம்பன் என்ன ஆனான்னு தெரியலையே அவனுக்கு வீட்டு பொறுப்பு பத்தி எதுவும் தெரியாது, அவனை நம்பி வீட்டை விட்டு வந்தோமே என்னாச்சி வீடுன்னு தெரியலையே” என மனதுக்குள் புலம்பிக் கொண்டாள்
மறுபக்கம் காவேரி சென்றதும் கொம்பனோ வீட்டு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான் அவனுக்கு துணையாக கணக்குபிள்ளையும் சண்முகமும் இருந்தார்கள்.
”ஆரம்பிக்கலாமா” என உற்சாகமாக கேட்டான் கொம்பன் கணக்குபிள்ளையோ அதற்கு
”நண்பா மறுபடியும் சொல்றேன் வீட்டு பொறுப்புகளை பார்க்கறது அவ்ளோ சுலபமில்லை”