(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”என்னத்த சாதனை அதுக்குகூட நாங்க மனசு வைச்சாதான் முடியும், நாங்க ஒத்துக்கலைன்னா வீட்டு வாசப்படி தாண்டி வெளிய போய் சாதிக்க முடியுமா என்ன, சாதனை செய்த பொம்பளைங்களுக்கு பின்னாடி எங்களை போல ஆம்பளைங்களோட சப்போர்ட் இருக்குது”

  

”அப்படி ஒரு நினைப்பா உங்களுக்கு, பெண்களால தனியாவே சாதிக்க முடியும் அவங்களுக்கு சப்போர்ட் தேவையில்லை, அவங்களை சுதந்திரமா விட்டாதானே, உங்க கீழேயே அடிமை போல நடத்தினா அவளும் என்ன செய்வா, பேர் புகழ் பணம் வருதுன்னா அவளை சாதிக்க அனுப்பிட்டு அவள் சாதிச்சதும் நான்தான் அவளுக்கு துணையா இருந்தேன்னு பெருமை பீத்திக்க வேண்டியது, இல்லைன்னா அவளை போட்டு கொடுமைப்படுத்த வேண்டியது, இவ்ளோதானே உங்க குணம்”

  

”நிப்பாட்டு யாருக்கு வேணும் காசு பணம்லாம், ஆம்பளைங்க சம்பாதிக்கற அளவுக்கு பொம்பளைங்களால சம்பாதிச்சிட முடியுமா, அவன் ராத்திரி பகலா கூட சம்பாதிப்பான் காடு மலைன்னு ஏறி இறங்கி வேலை பார்ப்பான், மாடு போல உழைப்பான் வேர்வையில குளிப்பான், பசி பட்டினியுமா இருந்து காசு சம்பாதிப்பான் இதுபோல உங்களால முடியுமா, நீங்கள்லாம் மென்மையானவங்க கொஞ்சம் கஷ்டம் வந்தா கூட உங்களால தாங்கிக்க முடியாது”

  

”ஏன் இப்படி பேசறீங்க பொம்பளைங்களும் இப்ப வேலைக்கு போறாங்களே பார்க்கறதில்லை, ஆம்பளைங்க தயங்கற வேலைகளை கூட பொம்பளைங்க செய்றாங்க எல்லா இடத்திலயும் அவங்கதான் இருக்காங்க, பொம்பளைங்களுக்குன்னா உடனே வேலை கொடுப்பாங்க ஏன் தெரியுமா, அவங்கன்னா பொறுப்பானவங்க எங்கயும் போக மாட்டாங்க அநாவசியமா நடந்துக்க மாட்டாங்க, ஆம்பளை 10 ரூபாய் சம்பாதிச்சா பொம்பளை ஒத்த ரூபாயாவது சம்பாதிப்பா, அதுக்கு அவள்கிட்ட நிறைய திறமையிருக்கு அதையெல்லாம் வெளிய கொண்டுவர விடறதில்லை, விட்டாதானே அவள் மேலுக்கு வர்றதுக்கு”

  

”வாயாடி வாயாடி எப்படி வளர்த்து வைச்சிருக்கான் பாரு உங்கப்பன் உன்னை இப்படி, ஆம்பளையோட சரிக்கு சரியா போட்டி போட்டு பேசறியே தப்பில்லை திமிர்பிடிச்சவள்ன்னு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.