”ப்ச் சொன்னா புரிஞ்சிக்கனும் கேள்வி கேட்காத, காலை இறக்கிவிடு இப்படி கால் மேல கால் போட்டு பேசக்கூடாது”
”முடியாது இது என்னோட விருப்பம்”
”யாராவது பார்த்தா தப்பாயிடும் என் கோபத்தை கிளறாத விடிஞ்சும் விடியாம புது சண்டையை உருவாக்காத”
”எதுக்கு இப்ப கோபப்படற, இது என் வீடு, நான் இங்க எப்படி வேணும்னாலும் இருப்பேன் ஏன் வெளியிடங்கள்ல கூட நான் இப்படிதான் இருப்பேன், அதனால என்ன பிரச்சனை வந்துடும், ஒரு பொண்ணு துணிச்சலா இருந்தா உங்களுக்கு பிடிக்காதே”
”கால் மேல கால் போட்டிருந்தா துணிச்சல்னு அர்த்தமா”
”அப்ப ஆம்பளைங்க கால் மேல கால் போட்டிருந்தா அது துணிச்சலா”
”ஆமாம் ஆம்பளைங்களுக்கு மிஞ்சினது யாரும் இல்லை”
”உங்களை போல ஆம்பளைங்களை பெத்துக் கொடுக்கறது ஒரு பொம்பளைதான் அப்படின்னா உங்களை மிஞ்சினது நாங்கதான்னு ஒத்துக்குங்க”
”இதையே இன்னும் எத்தனை வருஷம்தான் சொல்லிட்டு அலைவீங்களோ”
”எதுக்கு இப்ப சலிச்சிக்கறீங்க”
”இதப்பாரும்மா என்னதான் ஆணும் பெண்ணும் சமம்னு வசனம் பேசினாலும் அது நடைமுறைக்கு ஒத்துவராது”
”ஏன் அப்படி”