”என்னடா பெரிசா பிரச்சனை இருக்கப் போகுது நான் பார்க்காததா”
”நீ என்னிக்கு வீட்டைப்பார்த்த”
”இனிமேல பார்க்கிறேன் வெளிவேலைகளை பார்த்தவனுக்கு வீட்டு வேலைகளை பார்க்க வராதா என்ன” என்றான் கெத்தாக
”என்னவோ போ ஒண்ணும் சொல்றதுக்கில்லை” என அலுப்பாக சொல்ல சண்முகமும்
”மாப்பிள்ளை எதுக்கு உங்களுக்கு சிரமம் வீட்டு பொறுப்புகளை நான் பார்த்துக்கிறேன்”
”மாமா உங்களுக்கே உடம்பு சரியில்லை ஓய்வு தேவை அதுக்குதான் என்னை வீட்டோட மாப்பிள்ளையா கொண்டு வந்தீங்கள்ல, பின்ன எதுக்காக இப்படி பேசறீங்க எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க போய் ஓய்வெடுங்க”
”அதுக்கில்லை மாப்பிள்ளை”
”எல்லாம் நான் பார்த்துக்கிறேன் மாமா”
”சரி துணைக்காவது இருக்கேன்“
”எதுக்கு மாமா”
”ஏதாவது சந்தேகம் எழுந்தா அதை தீர்க்கறதுக்குதான்”
”சரிங்க மாமா உங்க விருப்பம்” என சொல்லியவன் அந்த வீட்டை சுற்றி முற்றி பார்த்தான்.
சில நாட்களுக்கு முன்புதான் காவேரிக்கு திருமணம் என்று வீட்டை சுத்தம் செய்து பெயின்ட் அடித்திருந்தார்கள் அதைக்கண்டவன்