(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

அவனுக்கென ஒரு அறையை எடுத்துக் கொண்டான், அதற்கே சண்முகம் கவலைக்கொள்ள அவருக்கு கணக்குபிள்ளை ஆறுதல் கூறினான். தெருவில் தொடங்கி பின்பக்கம் கொல்லை வரை அனைத்து இடங்களையும் அவனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிவிட்டு ஓய்ந்துப் போய் அமர காவேரி வர சரியாக இருந்தது.

  

காவேரிக்கு அந்த வீடே புதிது போல தெரிந்தது அவள் இதுவரை கொம்பனது வீட்டை சரியாக பார்த்ததில்லை அதனால் இந்த மாற்றங்கள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது

  

”பரவாயில்லையே ஒரே நாள்ல வீட்டையே மாத்தி அழகாக்கிட்டாங்களே, ம் இன்னும் என்னென்ன மாற்றம் செய்திருக்காங்கன்னு தெரியலையே ஒரு ரவுண்டு பார்த்துட்டு வரலாம்” என மனதில் நினைத்தபடியே ஒவ்வொரு இடமாக அவள் வலம் வர அவள் வந்ததையும் அவள் வீட்டை சுற்றிப் பார்ப்பதையும் கண்ட கொம்பனோ அசதியிலும் கெத்தாக நிமிர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

  

அதைக்கண்ட கணக்குபிள்ளைக்கு சிரிப்பாக இருந்தது. சண்முகமும் மகளின் வரவிற்காக காத்திருந்து அவள் வரவும் சட்டென அவள் பின்னாடியே சென்று கொம்பனுக்கு பாராட்டு உரையை வாசித்தார்

  

”பார்த்தியா காவேரி நம்ம வீடு எவ்ளோ மாறியிருக்கு இதுக்கு காரணம் மாப்பிள்ளைதான், இதைப்பார்த்தியா இதை கூட மாத்தினது அவர்தான், அப்புறம் இங்க தேவையில்லாத பொருள் இருந்ததே அதை எல்லாம் அப்புறப்படுத்தியாச்சி, அதை எடுத்தபின்னாடி பார்த்தியா இந்த இடம் எவ்ளோ காலியா இருக்குன்னு, இங்க ஏதாவது உபயோகமானதை வைச்சிக்கலாம்னு கூட மாப்பிள்ளை சொன்னாரு

  

அப்புறம் வீடு முழுக்க இருந்த ஒட்டடை எல்லாம் எடுத்தாச்சி, என்னதான் புதுசா பெயின்ட் அடிச்சிருந்தாலும் வீடு அழுக்கா இருக்கறது அவருக்கு சுத்தமா பிடிக்கலை, உடனே சுத்தம் செய்ய களம் இறங்கிட்டாரு வீட்டுக்குள்ள மட்டும் இல்லை வீட்டுக்கு முன்னாடி பின்னாடி கொல்லைப்புறம்னு எல்லா இடத்திலயும் புதுமை கொண்டு வந்திருக்காரு பாரு பாரு” என ஒவ்வொரு இடமாக காட்டிக் கொண்டே வர அவளும் அதையெல்லாம் கண்டு அசந்தபடியே வந்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.