(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அதுக்கென்ன பார்த்துக்கிட்டா போச்சி”

  

”அப்ப சரி இன்னிக்கு நானே தோப்புக்கு போறேன் எல்லா வேலைகளையும் டக்டக்குன்னு முடிச்சிட்டு சூரியன் மறையறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடறேன் நீ என்ன செய்யப் போற”

  

”வேற என்ன வீட்டை பொறுப்பா பார்த்துக்கனும் அவ்ளோதானே, இதெல்லாம் ஒரு வேலையா அசால்ட்டா செய்து முடிப்பேன் நீ கிளம்பு போ” என கெத்தாகச் சொல்ல அவளோ இளப்பமாக சிரித்துவிட்டு

  

”நீ தோக்கப் போற கொம்பா சாயங்காலம் வந்து உன் முகத்தை பார்க்கிறேன் இப்ப எவ்ளோ தெனாவெட்டா பேசற அதே போல அப்பவும் பேசறியான்னு பார்க்கலாம்” என சொல்லிவிட்டு அவள் செல்ல கொம்பனோ

  

”திமிரை பாரு பெரிய வீட்டுப் பொறுப்பு இதை என்னால பார்த்துக்க முடியாதா என்ன, தோப்பு வேலைகளை பார்த்துக்கறது அவ்ளோ சுலபமா என்ன, எவ்ளோ கஷ்டம் அது, அதைகூட புரிஞ்சிக்காம போறா பாரு பெரிய மனுஷியாட்டம், போடி போ சாயங்காலத்துக்குள்ள அலறி அடிச்சி அய்யோ சாமின்னு ஓடிவந்து என்கால்ல விழுவடி அப்ப பார்த்துக்கறேன் உன்னை” என சொல்லிக் கொண்டே கணக்குபிள்ளையை தேடிச் சென்றான். அவனோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க அவனது உறக்கத்தை கலைத்து நடந்ததை சொல்ல அவனோ அதிர்ந்தான்

  

”நண்பா நீ என்ன முட்டாளா“

  

”என்னடா சொல்ற”

  

”பின்ன வெளி வேலையும் வீட்டு வேலையும் ஒண்ணா, இருக்கறதுலயே கஷ்டமானது வீட்டு பொறுப்புதான் நண்பா, அதனாலதானே அதை பொம்பளைங்ககிட்ட கொடுத்தாங்க, நீ பாட்டுக்கு உன் பொண்டாட்டிக்கிட்ட சவால் விட்டு வந்திருக்கியே கொஞ்சமாவது யோசிச்சி பேசியிருக்கலாம்ல”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.