”ப்ச் இதுவா இப்ப முக்கியம்”
”ஆமாம் வாழ்க்கைக்கு தேவையான எல்லா விசயங்களையும் திருக்குறள்ல எழுதியிருக்காங்க யார் ஒருவன் திருக்குறள் வழி நடக்கறானோ அவனுக்கு இந்த உலகமே தலை வணங்கும் சார்”
”உன்னோட வேதாந்ததை நிப்பாட்டிட்டு வந்த வேலையை பாரு”
”நானும் அதைதான் சார் பார்க்கிறேன், அங்க பாருங்க பிரேக் டைம்லதானே கான்டீன் வேலை செய்யனும் ஆனா இப்பவே வேலை செய்யுதே, மாணவர்கள் கான்டீன்லயே இருந்தா எப்ப வகுப்புக்கு போவாங்க எப்ப படிப்பாங்க”
”அவங்களுக்கு பசிச்சிருக்கும் வந்திருப்பாங்க“
”யாரும் சாப்பிடற மாதிரி தெரியலையே கதை பேசறாங்களே”
”சாப்பிட்டது செரிக்க கதை பேசறாங்க போதுமா”
”இது ஒரு வேலையா சார், எல்லாருமே சின்ன பசங்க இந்த வயசில கல்லை திண்ணா கூட செரிச்சிடும்னு சொல்வாங்களே”
”போதும்”
”ஓ அப்படியா சரி அங்க பாருங்க சார் பார்க்கிங் ஏரியால ஏன் இன்னும் மாணவர்கள் இருக்காங்க” என கேட்க அவனோ பார்த்தான் கடுப்பானான்
”சரி இந்த பக்கம் பாருங்க மாணவர்களுக்குதானே நீங்க சுதந்திரம் தந்தீங்க, ஆசிரியர்கள் எதுக்காக ஜாலியா சுத்திக்கிட்டு இருக்காங்க, அவங்க வகுப்புக்கு போகலையா” என கேட்க அதற்கும் அவனிடம் பதில் இல்லை