பார்த்தா இந்த ஸ்ட்ரைக் நடக்க விடாம தடுக்க வேண்டிய அவரே பலகையை பிடிச்சிக்கிட்டு நிக்கறாரு பாருங்க” என சொல்ல கோவலன் சிலம்புவை பார்க்க அவன் அதிர்ந்து தன்னிடம் இருந்த பலகையை கீழே போட்டான். அதில் கோவலனுக்கு வெறுப்பே வந்தது
”என்ன சிலம்பு இதெல்லாம் நீயுமா”
”சாரி நான் வந்து” என இழுக்க கண்ணகியோ
”வைஸ் பிரின்சிபால் உங்களால மாணவர்களுக்கு விளக்கம் தரமுடியுமா முடியாதா” என கேட்க சிலம்புவோ முடியாது என்பது போல் தலையாட்டி வைக்க அவள் மாணவர்களைப் பார்த்தாள். அதில் இருந்து ஒரு அப்பாவி ஜீவனை எழுப்பினாள்
“உன் பேக்கை கொடு”
”எதுக்கு”
“கொடுப்பா” என அதட்ட அதில் அவன் பயந்து பயந்து பையை தந்தான். அவளோ அதை திறந்துப் பார்த்தாள் உள்ளே ஒன்றுமே இல்லை காலியாக இருந்தது அதைக்கண்டவள் வியந்து
”நோட் கூட இல்லை என்னாச்சி” என கேட்க அதற்கு அவனோ
”இங்க பாடமே எடுக்கறதில்லை எதுக்கு நோட் வாங்கனும்னு வாங்கலை பேருக்கு பேக் கொண்டு வந்தேன் அவ்ளோதான்”
”சுத்தம்” என்றாள் கோவலனைப் பார்த்து அவனுக்கு அவமானமாக இருந்தது அங்கிருந்த ஆசிரியர்களைப் பார்த்து முறைத்தான். கண்ணகியோ உடனே மற்ற ஆசிரியர்களை அழைத்தாள்
”வாங்க எல்லாரும் வாங்க வந்து ஒவ்வொரு மாணவனோட பேக்கையும் செக் பண்ணுங்க”