(Reading time: 19 - 38 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

செமஸ்டர் எக்ஸாமை நான் 2 மாசம் தள்ளி வைக்கிறேன், ஏன்னா இதுக்கு அப்புறம்தான் உங்களுக்கு பாடமே எடுப்பாங்க, 2 மாசத்தில பாடம் எடுத்து முடிச்சிடுவீங்கள்ல” என ஆசிரியர்களை பார்த்து கேட்க அவர்கள் சரிசரியென அவசரமாக தலையாட்ட அதில் அவளோ

  

”நல்லது அப்படின்னா இப்ப இருந்தே பாடம் எடுக்க ஆரம்பிங்க 2 மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் இருக்கு பாஸ் மார்க் எடுக்கனும், நிறைய மார்க் எடுக்கனும்னு அவசியம் இல்லை, எல்லாருமே பாஸாகியிருக்கனும் அப்படி பெயில் ஆனா தாளாளர் சொன்னது போல டீசி தரப்படும்” என சொல்லி முடிக்க அனைவரும் அதற்கு சரிசரியென தலையாட்டினார்கள்.

  

உடனே கண்ணகி எழுந்து நின்றாள்

  

”நான் சொல்றதை அப்படியே திருப்பிச் சொல்லுங்க” என்றாள் சத்தமாக உடனே மாணவர்களும் எழுந்து நின்றுக் கொண்டார்கள்.

  

  

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

  

  

அவள் சொல்ல சொல்ல மாணவர்களும் நல்ல பிள்ளைகள் போல திருப்பிச் சொல்லி முடித்தார்கள்.

  

”இதுக்கு விளக்கம் யாராவது சொல்றீங்களா“ என கேட்க அப்படியொரு அமைதி நிலவியது .அந்த அமைதியை அந்நேரம் ரசித்தான் கோவலன்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.