”இதைதான் நான் முதல்லயே சொன்னேன், இது ஒண்ணும் வெளிநாடு கிடையாதுன்னு இங்க சில கட்டுப்பாடுகள் இருக்கு, அது இல்லைன்னா அப்புறம் எல்லாருமே தப்பு செஞ்சிட்டு வாழ்க்கையை தொலைச்சிட்டு அலைவாங்க, இனிமேலயாவது சில விசயங்களை புரிஞ்சி ஏத்துக்கற வழியை பாரு”
”சரிங்க தாத்தா அப்படியே செய்றேன்“
”ஆமா புது பிரின்சிபால் எப்படி பரவாயில்லையா”
”ம் ஏதோ“
”என்னடா இப்படி சொல்ற”
”சரிங்க தாத்தா பரவாயில்லை போதுமா ஆனாலும் அவள் என்னை அடிக்கடி நக்கல் பண்றா அதுதான் எனக்கு கோபமா வருது”
”எல்லாம் மாறும் நீ அவள்கிட்ட உன் கோபத்தை கொட்டாம அன்பை கொட்டு”
”அன்பா அதை ஏன் அவள்கிட்ட நான் கொட்டனும்”
”உங்க ரெண்டு பேரை நம்பி நான் அந்த கல்லூரியை கொடுத்திருக்கேன், அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா கல்லூரிக்குதான் ஆபத்து, ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்ங்கற மாதிரி ஆயிடும், நீங்க ஒத்துமையா செயல்பட்டாதான் கல்லூரி பழைய நிலைமைக்கு வரும் புரிஞ்சிக்க”
”சரிங்க தாத்தா புரிஞ்சிடுச்சி ஆனா ஒரு சின்ன சிக்கல் தாத்தா”
”என்ன சிக்கல்”
”2 மாசத்துக்குள்ள கண்டிப்பா ஒரு செமஸ்டர்க்குண்டான பாடத்தை சொல்லிக் கொடுக்க