முடியாது, அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் அதை மாணவர்கள் படிச்சி எக்ஸாம் எழுதி பாஸாவாங்களான்னு தெரியலை”
”அதனால என்ன சொல்ல வர்ற”
”பேசாம ஈசியான கேள்விதாளை தந்தா எப்படியிருக்கும், இந்த ஒரு முறை மட்டும்தான் தாத்தா, எல்லா மாணவர்களும் பாஸாயிடுவாங்க இல்லைன்னா நான் எல்லார்முன்னாடியும் சொன்ன மாதிரி பெயில் ஆனவங்களை நான் காலேஜ் விட்டு அனுப்பனும், அப்படி செய்தா பாவம் அந்த மாணவனோட எதிர்காலமே பாழாயிடும்னு பார்க்கிறேன், நீங்க என்ன சொல்றீங்க தாத்தா”
”இப்பதான் நீ பொறுப்பா பேசற, சரிப்பா நீ சொன்னதுகூட நல்ல யோசனைதான் அதையே செய் எதுக்கும் புது பிரின்சிபால்கிட்ட சொல்லிட்டு செய்“
”இதுவேறயா நல்ல நாள்லயே ஒழுக்கம்னு கத்துவா இதை சொன்னேன் குதிப்பாளே”
”வேற வழியில்லையே இருந்தா பாரு”
”இல்லை தாத்தா”
”அப்ப இதைதான் நீ செய்யனும்”
”ஷ்ஷ் சே அவளை வேற நான் சமாளிக்கனுமா கடவுளே, எனக்கு ஏன் இந்த சோதனை” என புலம்பிக் கொண்டே தன் அறைக்குச் சென்றான்
”எது எப்படியோ கண்ணகியையும் கோவலனையும் சேர்த்து வைக்கனும் வேலை விசயத்தில இவங்க ஒத்துமையா இருந்து செயல்பட்டா படிப்படியா அவங்க எண்ணங்கள் ஒண்ணாயிடும் அப்புறம் அவங்க ஒண்ணாயிடுவாங்க அடடே இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு அப்ப கூடிய சீக்கிரம் கோவலனுக்கு கல்யாணம் ஆயிடும்” என நினைத்து நிம்மதியாக உறங்கச் சென்றார் ஈஸ்வரமூர்த்தி.