(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அவனுக்காக திருமணத்திற்கு சம்மதித்தவள், அவனுடைய அம்மாவிடம் பணம் தருவதாக சொன்னவள், திருமணமான இரவில் அவனுடைய அன்பை கேட்டு அதிசயித்து அவனுடன் முழு மனதுடன் இணைந்தவள்...

   

இந்த நான்கு மாதங்களில் நடந்த சின்ன சின்ன சீண்டல்கள், அவளின் சிணுங்கல்கள்... சின்ன விஷயம், பெரிய விஷயம் என்றில்லாமல் அவனுடன் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் அவளின் இயல்பு... ஆனால் அவளின் இயற்கையான குணத்திற்கு மாறாக அவனுக்காக அவனின் அம்மாவின் சின்ன, பெரிய குற்றசாட்டுக்களையும் பெரிது படுத்திக் காட்டாத அவளின் காதல்...

  

விவேக்கிற்கு அவன் இருந்த வருத்தமான மன நிலையையும் தாண்டி குழப்பமாக இருந்தது...!

  

🌼🌸❀✿🌷

   

ற்ற நாட்கள் போல் அல்லாமல் விடிய காத்திருந்தவனாக பாரதி கண் விழிக்கும் முன்பே எழுந்து பால்கனியில் நடந்தான் விவேக்... வழக்கம் போல் ஆறு மணிக்கு ஒலித்த அலார சத்தத்தில் எழுந்த பாரதி, அவளுக்கு முன்பே எழுந்து விட்டிருந்த கணவனை ஆச்சர்யமாக பார்த்து விட்டு, அவனிடம் காலை வணக்கம் சொல்லி விட்டு, பேசியபடி கல்லூரிக்கு செல்ல தயாராவது, விவேக்கின் கண்ணில் பட்டாலும் கருத்தில் படவில்லை...

  

கணவனின் மௌனம் சில பல நிமிடங்களுக்குப் பிறகே பாரதியின் கவனத்தை எட்ட,

  

என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? நேத்து ஈவ்னிங்ல இருந்து இப்படி தான் இருக்கீங்க! என்னை பத்தி தெரியும் தானே? இப்படியே என்னை கண்டுக்காமல் இருந்தால் அப்புறம் நானும் உங்களை கண்டுக்கவே மாட்டேன்... திரும்ப நீங்க முதல்ல இருந்து ஸ்டார்ட் செய்யனும், ஞாபகம் வச்சுக்கோங்க... எனக்கு எல்லாம் ரோஷம் ரொம்ப ஜாஸ்தி...” என்றாள்!

  

பாரதி விளையாட்டாக சொன்னதில் விவேக்கிற்கு ஒரு எண்ணம் தோன்றியது. பாரதிக்கு அவனுடைய இந்த நோய் பற்றி தெரிய வேண்டிய அவசியம் என்ன? தெரிந்தால் கட்டாயம் அவள் வருத்தப் படுவாள்... அவனின் மரணத்திற்கு பின்னும் அவனை நினைத்து வருத்தப்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.