(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அடப்பாவி நீ ஒரு மனுஷனா கட்டின பொண்டாட்டி முன்னாடியே இன்னொருத்தியை பத்தி இவ்ளோ பேசற எனக்கு துரோகம் செய்ற அளவுக்கு வந்துட்டியா”

  

”இதப்பாரு கோபத்தில பொங்காத தப்பு என் மேல இல்லை உன்னை கூப்பிட்டா நீ என்கூட ஊர் சுத்த வருவியா, அப்படியே உன்னை கூட்டிட்டு போனாலும் வாய் பொத்தி கைகட்டியில நடக்கனும், அதுக்கு நான் காவேரியோட போய் வருவேன்”

  

”காவேரி காவேரி காவேரி நான்தானே காவேரி தெரியலையா”

  

”நல்லாத் தெரியுது நீ என் பொண்டாட்டின்னு வரும் போது என்னை பழிவாங்கற, அதே நீ காவேரியா என் முறைபொண்ணா இருக்கறப்ப அன்பா பழகற, எனக்கு பழிவாங்கற பொண்டாட்டி வேணாம், அன்பு காட்டற முறைப்பொண்ணே போதும்” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்தாள்.

  

”சரி உன் முறைபொண்ணுகூட நீ எவ்ளோ தூரம் பழகியிருக்கன்னு சொல்லு அதுக்கு ஏற்ப பாடம் எடுக்கறேன்”

  

”ஏதோ கட்டிப்பிடிக்கறது முத்தம் கொடுக்கற வரைக்கும் போயிருக்கேன்”

  

”பரவாயில்லையே காதலிக்காமலே முத்தம் கொடுக்கற அளவுக்கு போயாச்சா சரி போகட்டும் நாளைக்கு என்ன செய்ற, அவள் எந்த உடை உடுத்தறாளோ அதே நிறத்தில நீ உடை உடுத்திக்கிட்டு போய் அவள்கிட்ட நிக்கற”

  

”எதுக்கு அப்படி செய்யனும் அப்படி செய்தா காதல் வருமா”

  

”காதல் வராது ஈர்ப்பு வரும்”

  

”ஈர்ப்பா”

  

“ஆமாம் உடை விசயத்தில கூட நீயும் நானும் ஒரே மாதிரி”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.