ம்ம்ம் சரி ஆகட்டும் அவன் செய்றதை செய்யட்டும் அவன் முறைப்பொண்ணு அவனோட காதலை ஏத்துக்கிட்டாதானே ஏத்துக்கலைன்னா அவனோட திட்டம் தவிடுபொடியாகி கடைசியில பொண்டாட்டிகிட்டதானே வந்து நிக்கனும், வரட்டும் அப்ப பார்த்துக்கிறேன் அவனை” என நினைத்தபடியே உறங்கிப் போனாள்.
கொம்பனோ கணக்குப்பிள்ளையிடம் சென்று பேசினான்
”அறிவிருக்கா உனக்கு உன் பொண்டாட்டியை காதலிக்க அவள்கிட்டயே பாடம் கத்துக்கிட்டு வந்தேன்ங்கற எனக்கு ஒண்ணும் விளங்கலை”
”அவளை மாத்த முயற்சி செய்றேன் நண்பா“
”எப்படி”
”அவள் என்னை பழிவாங்க நினைக்கறா அந்த எண்ணத்தை மாத்தனும் அவளை எப்படியாவது என்னை ஏத்துக்க வைக்கனும் அதுக்கு ஒரே வழி அவளை காதலிக்க வைக்கனும்”
”என்னடா சொல்ற அப்போ இதெல்லாம் உன் திட்டமா”
”ஆமாம் எத்தனை நாள்தான் இப்படியே இருக்கறது சீக்கிரமா நான் அம்மாகிட்ட போகனும், போறப்ப அவளையும் கூட்டிட்டுப் போகனும், இப்பவே ஊருக்குள்ள என் மேல இருந்த மதிப்பு மரியாதை எல்லாம் காணாம போச்சி, எனக்கு வெளிய நடமாட முடியலை அவமானமா இருக்கு, அதனாலதான் வீட்டு பொறுப்புகளை ஏத்துக்கறேன்னு வீட்லயே முடங்கிட்டேன்”
”அப்படியா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லலை”
”நீதான் தங்கச்சி தங்கச்சின்னு அவள் மேல பாசம் பொழியறியே எங்க நான் சொல்றது”