(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”இதுக்கு முடிவே இல்லையா நீ மனசு வைச்சா நாம புதுசா வாழ ஆரம்பிக்கலாம்”

  

”எப்படி”

  

”நம்ம வீட்டுக்குப் போய்”

  

”ஏன் இங்கயே இருந்து வாழக்கூடாதா”

  

”இங்கயா இங்க எப்படி இது உன் வீடு எனக்கு பிடிக்கலை”

  

”இதே போல நானும் உன் வீட்டுக்கு மருமகளா வந்து கொஞ்ச நாள்ல எனக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னு சொன்னா என்ன செய்வியாம்”

  

”அதெப்படி பிடிக்காம போகும் அங்க நீ மகாராணி போல இருப்ப உனக்கு வேணும்ங்கறதை செய்றேன்”

  

”அதை இங்கயே செய்யலாம்ல”

  

”இங்க நீ என்னை புருஷனாவே மதிக்க மாட்டேங்கற, மதிச்சாதானே நானும் உனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குவேன்”

  

”ஆக உன் பிரச்சனை உன்னை நான் மதிக்கனும் அதானே”

  

”ஆமாம்” என சொல்ல அவளோ பலமாக யோசித்தாள் அவள் யோசிப்பதைக்கண்டு அவன் ஆர்வமானான், நிச்சயம் அவள் மனது மாறும் என நினைத்தான் ஆனால் அவளோ

  

”என்னை மன்னிச்சிடு கொம்பா என்னால உன்னை மதிக்க முடியாது, உன்னைப் பார்க்கறப்பலாம் எனக்கு நடந்த அவமானம்தான் கண்ணு முன்னாடி வந்து நிக்குது” என சொல்ல அவன் ஓய்ந்தேப் போனான்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.