”நிப்பாட்டு அதென்ன நானும்ங்கற காவேரின்னு சொல்லு”
”சரிப்பா நீயும் காவேரியும் ஒரே மாதிரி எண்ணம் கொண்டவங்கன்னு சொல்லாம சொல்றதுக்குதான் அப்படி செய்யனும்”
”ஓஹோ சூப்பரு அப்படியே செய்றேன் அப்புறம் அடுத்து”
”அவள் எதிர்ப்பார்க்காத நேரத்தில முத்தம் கொடு”
”எதுக்கு அவள்கிட்ட நான் அடிவாங்கனுமா”
”சே சே அப்படியில்லை கொம்பா முத்தம் கொடுக்கறது தெரிஞ்சி கொடுக்கறதை விட அவள் அசந்த நேரத்தில கொடுத்தா ஒரு மாதிரி ஃபீலிங்கா இருக்கும்”
”ஃபீலிங்கா”
”நீ கொடு அப்புறம் தெரியும் எல்லாத்துக்கும் கேள்வி கேட்டு என்னை கடுப்பேத்தாத”
”சரி சரி அடுத்து என்ன சொல்லு”
”ஏதாவது பாட்டு பாடி அசத்து”
”பாட்டா நானா அது சரியா வராது வேற வேற”
”என்ன வேற வேற பாட வராதா”
”என் கட்டை குரலை வெச்சி நான் பாடினா காவேரி பயந்து ஓடுவா”
”அதெல்லாம் ஓடமாட்டா நீ பாடு”