(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”இதுக்கு வேற வழியில்லையா”

  

”நான் அனுபவிச்ச வலிகளை நீ அனுபவிக்கனும் ஒவ்வொரு முறை கல்யாணம் நின்னப்ப நரகத்தில மாட்டிக்கிட்டது போல நான் பட்ட அவஸ்தைகளை நீ அனுபவிக்கனும்”

  

”இப்படி பழிவாங்கறதால உனக்கு என்ன கிடைக்கப் போகுது”

  

”மனநிம்மதி, நானும் வலிகளை சுமந்தேன் நீயும் வலிகளை சுமந்தங்கற எண்ணம் வந்ததும் நானே உன்னை ஏத்துக்குவேன், அதுவரைக்கும் நீ இந்த நரகத்தில கஷ்டத்தை அனுபவிச்சிதான் ஆகனும்” என சொல்ல அவனோ சோர்ந்துப் போய் எழுந்து செல்ல முயல அவன் மீது இரக்கப்பட்டவள்

  

”சரி கொம்பா உன்னைப் பார்த்தாலும் பாவமாயிருக்கு இந்த நரகத்தில இருந்து உனக்கு நான் விடுதலை கொடுக்கிறேன்” என சொல்ல அவனோ குழம்பி

  

”என்ன விடுதலை புரியலை”

  

”உனக்கு விவாகரத்து தரேன் நீ உனக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் செய்துக்க” என சொல்ல அவனோ கோபம் கொண்டான்

  

”நீதான் என் பொண்டாட்டி, இந்த ஜென்மத்தில வேற பொண்ணை நான் கனவுல கூட நினைக்க மாட்டேன், உனக்கு விவாகரத்தும் தரமாட்டேன், விவாகரத்து செய்துட்டு நிஜமான நரகத்தில வாழறதைவிட இப்ப நீ கொடுக்கற நரக வாழ்க்கை எவ்வளவோ மேல் நான் வரேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட அவளுக்கு ஆயாசமாக இருந்தது

  

ஏனோ அவளின் மனம் கனத்துவிட்டது, யார் பாவம் கொம்பனா இல்லை காவேரியா என அவளுக்கு அவளே ஆயிரம் முறை கேட்டுக் கொண்டாள், பதில் தெரியவில்லை, இதில் யார் வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் அடுத்தவரின் வாழ்க்கையும் சேர்ந்து பாதிக்கும் என்பதும் அவளுக்கு தெரியும், தெரிந்தே அனைத்தும் செய்தாள், கொம்பனை காயப்படுத்தி

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.