(Reading time: 32 - 64 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”நீங்கள்லாம் ஒரு தாளாளரா இதுதான் நீங்க வழிநடத்தற விதமா, கல்லூரியை நடத்த தெரியலை ஆனா குறுக்கு வழி மட்டும் நல்லாவே தெரிஞ்சி வைச்சிருக்கீங்க”

  

”அது அப்படியில்லை கண்ணகி, பாவம் மாணவர்கள் தப்பு என்னோடதாவே இருக்கட்டும் அதுக்காக அவங்களை பெயில் ஆக்கனுமா”

  

”இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்”

  

”இல்லை கண்ணகி”

  

”நான் சொன்னது சொன்னதுதான் ப்ளீஸ் நீங்க கிளம்பலாம் எனக்கு வேலையிருக்கு” என பட்டென சொல்லிவிட அவனுக்கு ஒருமாதிரியாகிவிட்டது, அவனோ கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி நேராக கம்பெனி நோக்கி புறப்பட்டான்.

  

ஸ்டாப் ரூமில் சிலம்பரசனோ ஒரு புதிய திட்டத்தை தீட்டியிருந்தான், அதன்படி பிரேக் டைம் வரவும் அனைத்து ஆசிரியர்களையும் ஒரு காலியான வகுப்பில் ஒன்று கூட்டினான்

  

”இதப்பாரு சிலம்பு ஏற்கனவே உன் பேச்சைக் கேட்டு ஸ்ட்ரைக் வரைக்கும் கொண்டு வந்தோம், ஆனா கடைசியில என்னாச்சி நமக்குதான் பிரச்சனையாயிடுச்சி, இப்ப மறுபடியும் எதுக்கு எங்களை சேர்த்து வைச்சிருக்க, இந்த முறையும் உன்னோட திட்டம் சொதப்பிச்சின்னா பாதிக்கப்படப் போறது நாமதான், அதை மறந்துடாத” என ஒரு ஆசிரியர் தௌவாககச் சொல்ல அதைக்கேட்டு சிலம்புவோ

  

”இப்ப நான் சொல்ல வர்ற திட்டம் நமக்கானது”

  

”என்ன அது”

  

”இன்னும் 2 மாசத்துல செமஸ்டர் இருக்கு, அதுக்குள்ள பாடம் எடுத்து முடிக்க முடியாது அதனால ஈசியா ஒரு வழி வைச்சிருக்கேன், முக்கியமான கேள்விகளை மட்டும் பாடமா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.