”உங்களை பத்தி விசாரிச்சான்ங்க அவன் அந்த வீட்ல இருந்தாலும் மனசெல்லாம் இங்கதான்ங்க இருக்கு”
”நமக்கென்னடி நாம வாழ்ந்து முடிச்சிட்டோம் ஆனா அவன் இன்னும் வாழவே ஆரம்பிக்கலை”
”எங்க அவள்தான் வாழ விடமாட்டேங்கறாளே”
”எல்லாம் அவள் மனம்மாறி அவனை ஏத்துக்குவா அதுவரைக்கும் அவன் பொறுமையா இருக்கனும்”
”என்னவோங்க ராத்திரி வேற அவனை போய் பார்க்கனும்”
”என்னத்துக்கு வர சொன்னானா”
”ஆமாம்ங்க பாவம் அவனால சமைக்க முடியலை, அதனால நானே அந்த வீட்டுக்குப் போய்”
”நீ சமைச்சிப் போடறேன்ங்கறியா“
”அதையும் சொன்னேன், ஆனா என் பொண்டாட்டி கண்டுபிடிச்சிடுவா அதனால நீ சொல்லிக் கொடு நான் சமையல் செய்றேன்னு சொன்னான்ங்க” என சொல்ல துக்க பெருமூச்சுவிட்டார்.
அன்றைய இரவு கொம்பன் பயத்துடன் காத்திருந்தான், பின் வாசலில் கொம்பன் இருக்க கணக்குபிள்ளையோ காவேரியின் அறைக்கு முன் இருந்தான், காவேரி வந்தால் தகவல் சொல்லலாம் என காவல் காத்தான், கொம்பனுக்கோ இதயம் தடதடவென அடித்துக் கொண்டது. அவனது தாயோ அந்த இரவிலும் மறைந்து மறைந்து வந்து சேர்ந்தார் அவர் வரவும்