”அம்மா அமைதியா வாம்மா வா வா, எதுவும் பேசாத வா ராத்திரி நேரம் மெதுவா பேசினா கூட சத்தமா கேட்கும் வாம்மா” என ரகசியம் போல சொல்லி அப்படியே அவரை அழைத்துக் கொண்டு சமையல்கட்டுக்குச் சென்றான். அங்கு சண்முகம் இருந்தார்
”சம்பந்தி”
”இருக்கட்டும் நீங்க ஆரம்பிங்க நான் என் பொண்ணு வராளான்னு பார்க்கிறேன்” என சொல்ல கொம்பன் உடனே தயாரானான்
”அம்மா நேரம் குறைவா இருக்கு, என் பொண்டாட்டி கண்டுபிடிக்கறதுக்குள்ள சமைச்சிடனும் சொல்லும்மா வேகமா சொல்லு, என்னென்ன செய்யனும்” என கேட்க அவரும் மடமடவென சொல்லலானான். அவர் சொல்ல சொல்ல கொம்பனே சமைக்கலானான், 2 மணி நேரத்தில் அற்புத வாசனையுடன் சமையல் முடிந்தது.
கொம்பனும் தன் தாயை பின் வாசல் வழியாக அனுப்பிவிட்டு முன்னால் வர அதற்குள் அந்த வாசனையால் ஈர்க்கப்பட்டு வந்த காவேரியோ
”என்ன பின் வாசல் வழியா வர்ற”
”ப்ச் அவசரம் ஆத்திரம் உனக்கென்ன போ போய் சாப்பிடு”
”நீதானே சமைச்ச”
”ஆமாம்” என சொல்ல அவளும் சாப்பிடச் சென்றாள்.
சாப்பாடு ஓரளவுக்கு அருமையாக இருந்தது, அவளும் சாப்பிட்டாள் குறை சொல்லவில்லை அவள் ஏதாவது சொல்வாளோ என நினைத்து பயந்தான், நல்லவேளை அவள் ஏதும் சொல்லாமல் உறங்கச் சென்றாள், அவள் சென்றதும் மற்றவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட்டார்கள்