(Reading time: 24 - 48 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”ஓகே நான் போய் வேலை பார்க்கிறேன்” என சொல்லிவிட்டு வேலை பார்க்க சென்றாள்.

  

அன்றைய மாலை நேரம் வீடு திரும்பிய கோவலன் தன் தாத்தாவிடம் காலேஜில் நடந்ததை சொல்ல அவரோ

  

”இந்த விசயம் எனக்கு ஏற்கனவே சொல்லிட்டாங்க”

  

”அதானே உங்களுக்குத் தெரியாத விசயம்னு ஏதாவது இருக்கா என்ன”

  

”இப்பவாச்சும் நீ ஒத்துக்கறியா புது பிரின்சிபால் செய்றது எல்லாமே கரெக்ட்தான்னு”

  

”ம் ஒத்துக்கறேன், அவள்கிட்ட ஏதோ திறமையிருக்கு தாத்தா, எல்லா மாணவர்களோட வெறுப்பையும் சுமந்தா ஆனா இப்ப எல்லா மாணவர்களும் அவள் பேச்சை மதிச்சி நடந்துக்கறாங்க அவள் கிரேட்தான், தாத்தா பரவாயில்லை உங்க செலக்ஷன் நல்லாதான் இருக்கு”

  

”உதயமூர்த்தியால கூட செய்ய முடியாததை ஏன் என்னாலயும் செய்ய முடியாததை இப்ப வந்தவ செய்துட்டா அவள் திறமைசாலி புத்திசாலி அவளை நான் பார்க்கனும்”

  

”எதுக்கு“

  

”எதுக்குன்னா என்ன அர்த்தம்”

  

”ரொம்ப அவள் மேல நம்பிக்கை வைக்காதீங்க, ஏதோ இன்னிக்கு ஒரு நாள் மாணவர்கள் வந்துட்டாங்க அதுகூட யார் யார் வர்றாங்கன்னு தெரிஞ்சிக்கனும்னு வந்திருப்பாங்க, அவ்ளோதான் நாளைக்கெல்லாம் வரமாட்டாங்க தாத்தா விட்டுத்தள்ளுங்க” என சொல்லிவிட்டு அவன் உறங்கச்சென்றான்.

  

மறுநாள் ஞாயிறு கூட காலேஜ் நடந்தது மாணவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள், பாடங்கள் மின்னல் வேகத்தில் நடத்தப்பட்டது செமஸ்டர் எக்ஸாம் மனதில் வைத்துக் கொண்டு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.