(Reading time: 24 - 48 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”நானா நான் இல்லை நான் வந்து“

  

”தப்பு செய்றவங்களுக்கு துணை போனா அதுக்கு அர்த்தம் நடந்த தப்புல உங்களுக்கும் பங்கு இருக்குன்னுதான் அர்த்தம்”

  

”இதனால எந்த பிரச்சனையும் வராது கண்ணகி”

  

”வரும் கண்டிப்பா வரும்” என சொல்லிய நேரம் ப்யூன் அவசரமாக வந்தான்

  

”மேடம் மேடம் ஆபிசர்ங்க வந்திருக்காங்க சீக்கிரம் வாங்க”

  

”ஆபிசர்களா யாரை சொல்றீங்க”

  

”யூனிவர்சிட்டியில இருந்து வராங்களாம் உங்களை சந்திக்கனுமாம் கூடவே போலீசும் வந்திருக்கு”

  

”போலீசா” என சொல்லியவள் கோவலனைப் பார்க்க அவனோ அதிர்ந்தான்.

  

அவசரமாக அவரகள் இருவரும் சென்றார்கள். அங்கு சிலம்பு செய்த வேலையை யூனிவர்சிட்டியில் இருந்தவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், பணம் வாங்கியவன் சிக்கினான் அவன் சொல்ல போலீசுடன் யூனிவர்சிட்டியை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.

  

அவர்களைக்கண்டதும் கோவலன் பதறினான், கண்ணகி மட்டும் தைரியமாக இருந்தாள் வந்தவர்கள் காச் மூச்சென பேசினார்கள், அவமானப்படுத்தினார்கள், கேவலமாக பேசினார்கள் அதை அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்

  

”நீங்க செஞ்சது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா உங்களை நாங்க கைது செய்றோம்” என போலீஸ் சொல்ல கண்ணகி அசரவில்லை அவள்

  

”சரிங்க“ என்றாள் அதைக்கேட்டு கோவலன் அதிர்ந்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.