(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”என்னடி சத்தியம்லாம் கேட்கற”

  

”பின்னாடி நீ மனசு மாறி வேங்கையன் வேணும்னு சொன்னா நான் ஏமாந்துடுவேனே“

  

”அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை, நீயே அவனை கல்யாணம் செய்துக்க நான் சத்தியம் செய்றேன், எனக்கு அவன் வேணாம் எனக்கு மூர்த்தி மாமாதான் வேணும்” என சொல்ல அவளோ

  

”சத்தியம் செய்யலையா” என கேட்க ஜானகியும் சிரித்தபடியே தன் தலைமேல் கைவைத்து சத்தியம் செய்யவும் மஹதிக்கு நிம்மதியானது

  

”இப்பதான் என் மனசுல இருக்கற பாரம் குறைஞ்ச மாதிரியிருக்கு“

  

”என்னடி சொல்ற“

  

”ஆமாம் இதுநாள் வரை குற்ற உணர்ச்சியில இருந்தேன்”

  

”குற்ற உணர்ச்சியா“

  

“ஆமாம் ஜானு என்னை மன்னிச்சிடு இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி நான் உங்கப்பாவோட சேர்ந்து மூர்த்தியையும் வேங்கையனையும் சந்திச்சேன், அவங்க பேசினதை கேட்டேன் அப்ப இருந்தே எனக்கு மூர்த்தியை பிடிக்கலை, வேங்கையனைதான் பிடிச்சிருந்தது, அவரை அப்ப இருந்தே நான் காதலிக்க ஆரம்பிச்சேன், இருந்தாலும் நீயிருக்கறப்ப எப்படின்னு தயங்கினேன், எப்ப நீயே சத்தியம் செய்து வேங்கையன் வேணாம்னு சொன்னியோ இப்ப எனக்கு நிம்மதியா இருக்கு”

  

”என்னடி சொல்ற நீ முன்னாடியே அவங்களை சந்திச்சியா”

  

”ஆமாம்”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.