”என்ன செய்றது மூர்த்தி மாமா வேணும்னு முடிவு எடுத்துட்டேன் அதான் இப்படி கஷ்டப்படறேன்”
”இப்படி கஷ்டப்பட்டுதான் நீ அவரை அடையனுமா”
”வேற என்ன செய்றது, பிடிக்காத வாழ்க்கையை வாழ சொல்றியா“
”அப்படியில்லை கொஞ்சம் வேங்கையனை பத்தி நினைச்சிப் பாரு, அவருக்கும் மூர்த்திக்கும் நடுவில இருக்கற வித்தியாசம் உனக்குத் தெரியலையா, நான் பார்த்தவரைக்கும் மூர்த்தி உன்னை வேலைக்காரி போல நடத்தறாரு, அதே வேங்கையன் உன்னை மகாராணி போல தாங்கறாரு கொஞ்சம் யோசிச்சிப்பாரு ஜானகி“
”நான் மூர்த்தி மாமாவை காதலிக்கிறேன் மஹதி என் காதலுக்கு துரோகம் இழைக்க சொல்றியா”
”சே சே இல்லை உன் காதல் உண்மைதான் ஆனா அதுக்கு ஏத்தவரு மூர்த்தியில்லையே”
”என்னடி இப்படி பேசற நீ இங்க வந்தது எதுக்கு என்னையும் மூர்த்தி மாமாவையும் சேர்த்து வைக்கதானே“
”ஆமாம் ஆனா வந்தபின்னாடிதானே தெரியுது மூர்த்தி எப்படிப்பட்டவர்ன்னு இதுக்கு நீ வேங்கையன்கூடவே இருக்கலாம் ஜானு“
”என்னால முடியாது இந்த ஜென்மத்தில நான் மூர்த்திக்கு மட்டும்தான் சொந்தம் வேங்கையன் எனக்குத் தேவையில்லை”
”மூர்த்தியை நீ கல்யாணம் செய்துக்கிட்டா ரொம்ப கஷ்டப்படுவ”
”பிடிச்சவங்களுக்காக பல கஷ்டங்களையும் தாங்கிக்க நான் தயார்”