(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

வீட்டு மானத்தையும் தெருவுக்கு கொண்டு வரமாட்டாள்ன்னு என்ன நிச்சயம், வேங்கையனாவது பரவாயில்லை, ஜானகி எவ்ளோ அவமானப்படுத்தினாலும் பொறுத்துக்குவான், அதுக்காக மூர்த்தி பொறுத்துக்குவானா மாட்டான்”

  

”நீங்க மூர்த்தியை பத்தி ரொம்ப நெகட்டிவா பேசறீங்களே, ஜானகி என்கிட்ட மூர்த்தியை பத்தி பாசிட்டீவா சொன்னாளே”

  

”அவளுக்கென்ன தெரியும், என் புள்ளை வீட்ல ஒரு மாதிரி இருப்பான் வெளிய ஒரு மாதிரியிருப்பான், அவள் பார்க்கறப்பலாம் அவன் வெளியதானே இருந்திருக்கான், அப்ப அவன் தங்கமா நடந்துக்குவான், அதை வைச்சி அவள் ஆசைப்பட்டா நான் என்ன செய்ய முடியும்”

  

”ப்ச் எனக்கு தலையே சுத்துது நான் போறேன்ங்க”

  

”சரி சரி ஒருவேளை உன் மனசு மாறிச்சின்னா என் புள்ளையை ஏத்துக்க”

  

”ஆஆ நானா பார்க்கலாம் நான் வரேன்” என சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறி வந்தவள் ஜானகியை கண்டாள்.

  

அதுவரை ஜானகி அறைக்கு வெளியே நின்று உள்ளே பேசுவதை கேட்டுக் கொண்டு கண்கள் கலங்கியிருந்தாள் அதைக்கண்ட மஹதியோ

  

”ஜானு என்னாச்சி ஏன் அழற”

  

”எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு மஹதி“

  

”ஒ நாங்க பேசினதை கேட்டியா”

  

”ஆமாம்“

  

“சாரி ஜானகி, நீ மூர்த்தியை பத்தி உயர்வா சொன்ன ஆனா அவனை பெத்த அம்மாவே தன் மகனை பத்தி ரொம்ப பயங்கரமா சொல்றாங்க, நல்லவேளை நீ அந்த வரனை கெடுத்தது

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.