”அவளுக்கு மூர்த்தி மேல காதல் அதான்“
”காதலாவது மண்ணாங்கட்டியாவது அவளுக்கு வேங்கையனை பிடிக்கலை அவ்ளோதான் சொல்லப்போனா ஜானகிக்கு மூர்த்தி ஏத்தவன் இல்லை”
”அட என்னம்மா நீங்களும் இதையே சொல்றீங்க எல்லாரும் இதைதான் சொல்றாங்க”
”ஆமாம் உண்மைதானே என்னவோ மூர்த்தி அமைதியானவன் பணிஞ்சி போவான்னு நினைக்கறா உண்மையில மூர்த்தி அப்படிப்பட்டவன் கிடையாது கோபக்காரன் பிடிவாதம் பிடிச்சவன்”
”ஜானகிக்காக உங்க பையன் ஏகப்பட்ட பரிசு பொருட்களை தந்தாராமே”
”யாரு அவனா, அவனே ஒரு கஞ்ச பிசினாறி பெத்த தாய்க்கே 5 ரூபாய் செலவு செய்ய மாட்டான், அவனாவது பரிசு பொருள் வாங்கறதாவது”
“அப்ப ஜானகிக்கு மட்டும் வாங்கித்தந்தாரே அதுவும் ஆசையிலதானே”
”அதெல்லாம் இல்லை, இதுவரைக்கும் ஜானகிக்கு அவன் எதையும் செய்ததில்லை, அந்த வேங்கையன் தான் அவளுக்காக எதையாவது வாங்கிட்டு வந்து இவன்கிட்ட கொடுத்து அனுப்புவான்”
“எதுக்காக அப்படி செய்யனும் அவரே நேரா போய் ஜானகிக்கு தந்திருக்கலாமே“
”அவனைதான் கிட்டகூட ஜானகி சேர்க்கலையே வெறுக்கறாளே, அவள் வெறுத்தாலும் வேங்கையன் அவளை விரும்பினான், அவளுக்காக எல்லாம் செய்தான், அவள் படிப்பு செலவுல இருந்து அவள் வயசுக்கு வந்தப்ப நடந்த சடங்கு வரைக்கும் எல்லாமே அவன் செலவுதான்“