வீரசிங்கம் மாமா பணம் வேணும்னு கேட்டாலும் நான்தான் பீரோல இருந்து எடுத்து தரனும் எப்படி” என்றாள் கெத்தாக சிரித்தபடியே அவளின் கையில் இருந்த கொத்துசாவியைக்கண்டு அதிர்ந்தாள் ஜானகி
”எப்படி ஒரே நாள்ல உன்னால இதையெல்லாம் செய்ய முடிஞ்சது“
”இதுல போய் என்ன இருக்கு, அவங்க என்னை இந்த வீட்டு சின்ன மருமகளா பார்க்கறாங்க, கல்யாணத்துக்கு முன்னாடியே சில பல பொறுப்புகளை கடமைகளை கத்துக்கோன்னு சொன்னாங்க நானும் சரின்னு சொன்னேன், உடனே கொத்துசாவி தந்துட்டாங்க”
”எனக்கு தந்ததில்லையே“
”நீ என்னிக்குமே இந்த வீட்டு மருமகளா இருந்ததில்லையே ஜானு”
”தினமும் நான்தான் பூஜையறையை சுத்தம் செய்வேன் ஆனா இன்னிக்கு நீ செய்திருக்க”
”ஆமாம் இது முன்னோர்களோட பழக்கமாமே, வழிவழியா இந்த வீட்டு மருமகள்தான் பூஜையறையை சுத்தம் செய்யனுமாமே, எனக்குச் சொன்னாங்க செய்றியான்னு அத்தை கேட்டாங்க நான் தட்டாம சரின்னு சொன்னேன், பெரிசா கஷ்டம்லாம் இல்லை, இருக்கற சாமி போட்டோக்களை சுத்தம் செய்து பூ வைச்சேன், தரையை தண்ணியால துடைச்சேன் இது ஈசியா இருக்கு ஜானு” என்றாள்.
அதைக்கேட்டு பெருமூச்சுவிட்ட ஜானகியை அழைத்தார் பரிமளா
”ஏய் ஜானகி எங்கடி இருக்க” என கத்த ஜானகி அதிர்ந்து
”இதோ அத்தை வரேன்” என சொல்லிக் கொண்டே சென்றாள்.
மஹதியும் என்ன நடக்கிறது என தெரிந்துக் கொள்ள சென்றாள்.
அங்கு பரிமளாவோ ஜானகிக்கு வரிசையாக வேலைகளை தரலானார். அவளோ தடுமாறினாள்