”பூஜையறையை வேற நாமதான் சுத்தம் செய்யனும், ம் வீட்டு மருமகள்தான் மகாலட்சுமியாம், அவள் சுத்தம் செய்தாதான் பூஜை நடக்குமாம், எதுக்குதான் இப்படி ரூல்ஸ் போட்டாங்களோ பாட்டனுங்க” என திட்டிக் கொண்டே பூஜையறைக்கு வர மஹதி அந்த அறையை அழகாக சுத்தம் செய்திருப்பதைக்கண்டு வியந்தாள்
”மஹதி நீ என்ன இங்க” என கேட்க அவளோ
”வா ஜானு இப்பதான் குளிச்சி முடிச்சி வந்தியா, நான் காலையில 5 மணிக்கே எழுந்துட்டேன்”
”5 மணிக்கா எப்படி உன்னால மட்டும் எழ முடிஞ்சது”
”ஏய் உனக்குத்தான் தெரியும்ல, நான் விடிகாலையில எழுந்து உடற்பயிற்சி செய்வேன்னு ஸ்கிப்பிங் யோகாதான் செய்வேன் ஆனா இங்க வந்தபின்னாடி இந்த வீட்டு வேலைகளை செய்தாலே போதும் உடற்பயிற்சி செய்ய தேவையில்லை எப்படியோ என் உடம்பு பிட்டா இருந்தா போதும்ல”
”அதுக்குன்னு கஷ்டப்பட்டு வேலை செய்யனுமா”
”இதுல என்ன கஷ்டம் இருக்கு, எனக்கு உதவி செய்ய அத்தை இருக்காங்க வேலைக்காரங்களும் இருக்காங்க, நான் பெரிசா எதையும் செய்யலை இருக்கற வேலைக்காரங்களுக்கு அதை செய்ங்க இதை செய்ங்கன்னு கட்டளைதான் போட்டேன்“
”கட்டளையா”
”ஆமாம் அத்தைதான் எனக்கு முழு அதிகாரத்தை கொடுத்துட்டாங்களே”
”எப்போ”
”அப்பவே இங்க பாரு வீட்டு கொத்துசாவி கூட எனக்கு கொடுத்துட்டாங்க, இனிமேல