”இது வேற வீடுங்கறதால இவ்ளோதான் வேலையே, இதே நம்ம வீடுன்னா இன்னும் நிறைய வேலைகள் இருக்கும், சரி சரி போ போய் சமையல் செய், இப்பவே நேரமாயிடுச்சி மூர்த்திக்கு காபி வேணும் கொண்டு போய் கொடு, அப்புறம் எங்களுக்கு டீ கொண்டா சூடா இருக்கனும், ஆறிப்போச்சின்னா அவன் குடிக்க மாட்டான் போ போ” என விரட்ட அவளோ நொந்தபடி வெளியேறி வர சட்டென மஹதி பரிமாளாவை பிடித்தாள்
”ஒரு நிமிஷம்” என்றாள்
”நீயா என்ன”
”எதுக்கு இப்படி ஜானகியை கஷ்டப்படுத்தறீங்க, அவள் பாவம் எங்க அவள் உங்க பையன் வாழ்க்கையில வந்துடக்கூடாதுன்னு இப்படியா அவளை வேலை வாங்குவீங்க”
”அப்படியெல்லாம் இல்லையே ஒருவேளை வேற வழியில்லாம ஜானகியே எங்க வீட்டுக்கு மருமகளா வந்தாள்னா கூட இதேபோலதான் நடந்துக்கனும், அவளுக்காக எங்க குடும்ப வழக்கத்தை மாத்திக்க முடியாது, வேணும்னா அவள்தான் எங்க வீட்டுக்கு ஏற்ப மாறிக்கனும்”
”ஆனா இப்படி அவளை கஷ்டப்படுத்தினா அவள் கோச்சிக்கிட்டு தனிக்குடித்தனம் போயிட்டா”
“அதுக்கு வாய்ப்பில்லை, அப்படி ஒரு வேலையை மூர்த்தி செய்ய மாட்டான் காரணம், அவன் தனியா போனா சொத்துல ஒரு பத்து பைசா கிடைக்காது, அது அவனுக்கு ஏற்கனவே சொல்லியாச்சி, அந்த பயத்திலதானே இருக்கான், அவனாவது ஜானகி பேச்சைக் கேட்டு போறதாவது வாய்ப்பில்லை“
”இதுவேறயா அய்யோ பாவம் ஜானகி அவளை நினைச்சா கஷ்டமாயிருக்கு“
”அது அவளோட தலைவிதி, இந்த வீடே அவளுக்கு சொர்க்கம்தான், இங்கயே மகாராணி போல அவளை பார்த்துக்கறாங்க, இருந்தும் அவள் திமிரெடுத்துப் போய் மூர்த்திதான் வேணும்னு வராளே, அதுல இருந்தே தெரியலை அவளோட யோக்யதை”