”அப்புறம் உன் இஷ்டம் நான் கிளம்பறேன்”
”என்னடி வந்ததும் போறேங்கற”
”வேற என்ன செய்றது நடக்கறதை பார்த்து உனக்கு புத்திமதி சொன்னா நீ வீம்பு பிடிக்கற இனி உன் முடிவை என்னால மாத்த முடியாது அதனால“
”அதனால“
”நான் ஊருக்கு போகலாம்னு இருக்கேன்”
”அவசரப்படாத இங்கயே இரு, நானும் மூர்த்தி மாமாவும் ஒண்ணு சேர்றவரைக்கும் நீ வேங்கையனுக்காக இருக்கனும், அப்பதான் நான் நினைச்சது நடக்கும்”
”ப்ச் என்னடி இப்படி பேசற”
”இதப்பாரு நீ சொன்ன மாதிரி இன்னும் ஒரு மாசம் ஆகலை, அதுக்குள்ள எப்படியாவது மூர்த்தி மாமா மனசுல நான் இடம்பிடிச்சி அவர் வாயாலயே என்னை ஏத்துக்க சொல்லி சொல்ல வைக்கலை, என் பேரு ஜானகி இல்லை”
”சபாஷ் இப்படித்தான் இருக்கனும் உன் நம்பிக்கை உன்னை கைவிடாது ஆனா இதுல வேங்கையன்தான்டி பாவம்”
”ஏன்”
”பின்ன நீயும் மூர்த்திகிட்ட போயிடுவ நானும் உன் பிரச்சனை சால்வ் ஆனதும் என் ஊரை பார்த்து போயிட்டா அப்புறம் வேங்கையன் நிலைமை“
”அவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன“