போல் பலமாக ஆட்டினார்கள்.
”எங்க நான் சொல்றதைச் சொல்லுங்க இந்த முறை நான் சொல்றதுக்கு விளக்கம் உங்கள்ல ஒருத்தராவது சொல்லனும்” என சொல்லிவிட்டு ஆரம்பித்தாள் அவள் சொல்ல சொல்ல மாணவர்களும் சொன்னார்கள்
குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
”இதுக்கான விளக்கம் யார் சொல்றீங்க” என கேட்க மாணவர்களிடம் பலத்த அமைதி சில நிமிடங்கள் கழித்து ஒரு மாணவன் மட்டும் முன் வந்தான்
”நான் சொல்றேன்” என சொல்ல அவளும்
”சத்தமாச் சொல்லு எல்லாருக்கும் கேட்கனும்” என்றாள் அவனோ சத்தமாக சொன்னான்
பிறரிடம் எப்போதும் குற்றங்களையேப் பார்க்கக் கூடாது. கொலை, திருட்டு செய்பவரோடு சேரக்கூடாது. படித்தவர்களை இகழக்கூடாது. பிறன் மனைவியை நினைக்கக் கூடாது. ஆட்சிசெய்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது. மனமே! வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, நிகரில்லாத முருகப் பெருமானை போற்றுவாய்.