என சரியாக சொல்ல அவளோ வியந்து
”ஆமா உனக்கெப்படி இந்த விளக்கம் தெரியும்”
”நீங்க இருந்த அதே அநாதை ஆசிரமத்திலதான் நானும் இருந்தேன் மேடம்” என்றான் அதைக்கேட்டு அவள் மனம் கலங்கியது
”இப்பவும் நீ அங்கதான் இருக்கியா”
”இல்லை ஒரு குடும்பம் வந்து என்னை தத்து எடுத்தாங்க என்ன இருந்தாலும் இந்த நீதிமொழிகளை என்னால என்னிக்குமே மறக்க முடியாது உங்களை நான் அந்த ஆசிரமத்தில பார்த்திருக்கேன்”
”இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை”
”சொல்லியிருந்தா என்ன நடந்திருக்கும், என் மேல உங்களுக்கு பரிதாபம் வந்திருக்கும் என்மேல யாராவது இரக்கப்பட்டா எனக்குப் பிடிக்காது அதனால நான் சொல்லலை”
என்றான் அதில் அவளும் மனம் மகிழ்ந்து அவனை பாராட்டினாள்
அத்துடன் மாணவர்கள் கலைந்துச் சென்றார்கள்
மாதவியோ நேராக ஈஸ்வரமூர்த்தியிடம் வந்து நின்றாள்
”நான் இங்க வேலை செய்ய வந்திருக்கேன், அதுக்கு உங்க அனுமதி வேணும் என்னோட சர்டிபிகேட் இது பாருங்க” என நீட்ட அவரோ அதை வாங்கிப் பார்த்து
”பரவாயில்லையே நிறைய டிகிரி முடிச்சிருக்க”
”ஆமாம் எனக்கு படிக்க பிடிக்கும்”