கண்ணகியோ அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து
”ஒரு மாசம் கூட இல்லை செமஸ்டர் எக்ஸாம்க்கு இனிமேல உங்களை இப்படியே விட்டா இந்த காலேஜ்க்கு கெட்ட பேர் வந்துடும், உங்களுக்கென்ன இந்த இடம் இல்லைன்னா வேற காலேஜ்க்கு போகலாம்னு நினைப்பீங்க, அப்படி நடக்கவிடாம பண்ணிடுவேன் எல்லாருக்கும் பேட் சர்டிபிகேட் கொடுத்தேன்னு வைங்க யாருக்குமே வேற காலேஜ்ல இடம் கிடைக்காது, இதை பத்தி நான் ஏற்கனவே சொல்லியும் நீங்க அதை பெரிசா எடுத்துக்கலை, அதனால உங்களை இனிமேல கண்டிக்காம விட்டது என் தப்பு, இனிமேல என்னோட நடவடிக்கைகள் உங்களுக்கு கஷ்டத்தை தரலாம், வேற வழியில்லை அனுபவிங்க” என சொல்லி முடித்துவிட்டு தாளாளரைப் பார்த்தாள்
ஈஸ்வரமூர்த்தியோ அங்கிருந்த ஆசிரியர்களை முன்னால் அழைத்து
”உங்களை நான் முழுசா நம்பினேன், என் பேரன் ஆயிரம் சொன்னாலும் உங்களுக்கு எங்க போச்சி புத்தி எனக்கு விசுவாசமா இருந்து கல்லூரியை வழிநடத்துவீங்கன்னு நினைச்சா இப்படி ஆக்கிட்டீங்களே” என திட்ட ஒரு ஆசிரியர்
”இதுக்கு காரணம் நாங்க இல்லை அந்த சிலம்புதான் காரணம்”
“அவன் ஆயிரம் சொன்னா அதை கேட்டு நடப்பீங்ளோ, இப்ப என்னாச்சி அவன் காணாம போயிட்டான் அவனால இப்ப உங்க எல்லாருக்கும் வேலை போச்சி” என சொல்ல மாதவி கோவலன் அதிர்ந்தார்கள், ஆசிரியர்களுக்கு பேயறந்ததை போலானார்கள்.
”என்னது அய்யோ வேணாம் அப்படி சொல்லாதீங்க” என அலற அவர் கேட்கவில்லை
மாணவர்கள் பார்க்கும் போதே அனைத்து ஆசிரியர்களின் வேலைகளையும் நீக்கும் பேப்பரில் கையெழுத்திட்டார், அதில் சில ஆசிரியர்கள் கெஞ்சினார்கள்
”சார் எங்களுக்கு இப்பவே வயசு ஆயிடுச்சி இனிமேல எங்களுக்கு எங்க வேலை கிடைக்கப்