(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

நினைச்சா இவன் இன்னொரு பிரச்சனையை கொண்டு வந்திருக்கான், பாவம் காவேரி அவளை போய் கஷ்டப்படுத்தனும்னு நினைக்கிறானே, நாம இவனை இப்படியா வளர்த்தோம், எப்ப இருந்து இவனுக்குள்ள இப்படி ஒரு கெட்ட எண்ணம் வந்தது”

  

”அதுக்கு காரணம் காவேரிதானே அவள் செய்ததை அவளுக்கே திருப்பி செய்யனும்னு நினைக்கிறான்”

  

”சே இப்பதான் நம்ம வீட்டுக்கு புதுவிடியல் வந்திருக்கு, மருமகள் வந்திருக்காள்ன்னு நிம்மதியா இருந்தா இந்த கொம்பன் இப்படி நடந்துக்கிறானே இனி காவேரி என்னென்ன செய்வாள்ன்னு தெரியலையே, நான் வேணா அவள்கிட்ட போய் பேசி பார்க்கவா“

  

”கொம்பனுக்காக நீ பேசப் போனா அவள் காதுகொடுத்து கேட்க மாட்டா”

  

”எனக்காக பேசறேன், நான் ஒரு அம்மா கொம்பனோட வாழ்க்கைக்காக பேசறேனே”

  

”வேணாம் இப்பவும் காவேரி மேல தப்பில்லை, கொம்பன் மேலதான் தப்பு அவன் தப்பை உணரனும், இது அவங்க வாழ்க்கை, புருஷன் பொண்டாட்டிக்குள்ள நாம தலையிடக்கூடாது அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துப்பாங்க”

  

”எப்படி பழிவாங்கிகிட்டேவா”

  

”நாம உள்ள நுழைஞ்சா அப்புறம் இன்னும் மோசமாயிட்டா என்ன செய்வ”

  

”எனக்கு ஒரே கவலையா இருக்குங்க”

  

”கவலைப்படாத பார்த்துக்கலாம் அமைதியா இரு” என பேச அவ்விருவரின் பேச்சைக் கேட்ட காவேரி நீண்ட பெருமூச்சுவிட்டபடியே கொம்பனின் அறைக்குச் சென்று படுக்கையில் அமர்ந்தாள்

  

”ஒரு பக்கம் என் மாமனார் மாமியார் இன்னொரு பக்கம் இந்த கொம்பன் என்ன செய்றது,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.