(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”கொம்பா சின்ன பொண்ணுப்பா, விவரம் தெரியலை கொஞ்சம் பக்குவமா நடந்துக்கப்பா சரியா நான் வெளிய இருக்கேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட அவளுக்கு இன்னும் அச்சம் அதிகமானது

  

கொம்பன் தன்னை என்ன செய்வானோ என நினைத்து மிரள கொம்பனோ மெதுவாக எழுந்து அந்த அறைக்கதவை தாள்பாள் போட்டு காவேரியிடம் வந்து நின்றான், அவளோ உள்ளுக்குள் பயந்திருந்தாலும் அதை வெளிகாட்டினால் கொம்பன் தலைக்கு மேல் ஏறி நின்று ஆடுவான் என நினைத்து உடனே தன்முகபாவத்தை மாற்றி கலகலவென சிரித்தாள். இதை கொம்பன் எதிர்பார்க்கவில்லை.

  

”என்னடி சிரிப்பு உனக்கு”

  

”நீ ஒரு அப்பாவி கொம்பா என்னோட நடிப்பை  எப்படி நீ நம்பின”

  

”நடிப்பா”

  

”பின்ன நான் என்ன முட்டாளா உன் பேச்சைக் கேட்டு மனம் மாறி இங்க வர்றதுக்கு“

  

”என்னடி சொல்ற”

  

”உனக்கு நரகத்தை காட்டதானே என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனேன், முடிஞ்சவரைக்கும் உன்னை கஷ்டப்படுத்தி பார்த்துட்டேன், இனி என்ன செய்றதுன்னு தெரியலை நீ வேற அடிக்கடி அப்பா அம்மா கஷ்டப்படறாங்கன்னு சொல்லி வருத்தப்பட்டியா, அதனால உன்னை வேற மாதிரி பழிவாங்கனும்னு திட்டம் போட்டேன், என் திட்டத்துக்கு ஏற்ப நீயும் ஊர்க்காரங்க முன்னாடி என்கிட்ட மன்னிப்பு கேட்டியா எப்படியும் நீ செய்வன்னு தெரிஞ்சிதான் உன்னை மன்னிச்சி ஏத்துக்கற மாதிரி ஏத்துக்கிட்டு இந்த வீட்டுக்கு வாழ வந்தவ போல வந்து சேர்ந்துட்டேன், என் வீட்ல நீ படற கஷ்டத்தை நினைச்சி உன் அப்பா அம்மா வருத்தப்படறதை விட உன் வீட்ல உங்க அப்பா அம்மா முன்னாடி நீ கஷ்டப்படறதை பார்த்தா அவங்க இன்னும் அதிகமா வருத்தப்படுவாங்கள்ல” என சொல்ல அரண்டான் கொம்பன்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.