(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”என்ன ஒரு மாதிரியா பேசறீங்க”

  

”இத்தனை நாளும் எனக்கு நீ நரகத்தை காட்டினல்ல இப்ப நான் உனக்கு காட்டறேன்”

  

”பழிவாங்கறதுக்காகவா என்கிட்ட மன்னிப்பு கேட்டு வரவழைச்சீங்க”

  

”என்ன செய்றது, எத்தனை நாள்தான் நீயே ஜெயிச்சிக்கிட்டு இருப்ப, இப்ப பார்த்தியா நீ தோத்துட்ட, இனி உனக்கு என்ன நடந்தாலும் யாரும் என்னை தப்பு சொல்லமாட்டாங்க, நீ சொல்றதையும் நம்பமாட்டாங்க, ஏன்னா நான்தான் ஊரறிய உன்கிட்ட மன்னிப்பு கேட்டேனே, நீயும் என்னை மன்னிச்சி ஏத்துக்கிட்ட, இனிமேல என்னை பழிவாங்க ஏதாவது செய்யனும்னு நினைப்ப, மாட்ட, அது உன்னால முடியாது, என்ன சொன்ன எனக்கு நரகத்தை காட்டப்போறியா உண்மையான நரகமே இனிமேலதான்டி நீ பார்க்கப் போற“ என்றான் அதைக்கேட்டு அவள் நடுங்கிப் போனாள்.

  

கொம்பனின் தாய் தந்தையோ பாசமாக காவேரியிடம் வந்து நிற்க உடனே முகத்தை மாற்றி சிரிப்புடன் நின்றான் கொம்பன், அவனின் அதீத நடிப்பைக்கண்டு மிரண்டாள் காவேரி, கணக்குபிள்ளையோ கொம்பனிடம் வந்து நின்று காவேரியைப் பார்த்து இளப்பமாக சிரிக்க அவளுக்கு வேர்த்துக் கொட்டியது.

  

அவளை கொம்பனின் அறையில் அழைத்துச் சென்றுவிட்டார்கள். அந்த அறை பார்க்க அழகாக இருந்தாலும் ஏதோ சிங்கத்தின் குகையில் மாட்டிக் கொண்ட புள்ளிமான் போல தவித்தாள் காவேரி.

  

அவளின் தவிப்பை ரசித்தபடி வந்த கொம்பனோ அங்கிருந்த படுக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவளோ பயத்தில் வேர்த்துக் கொட்டி நடுக்கத்துடன் நின்றிருந்தாள்.

  

”என்ன காவேரி உன் முகத்தில பயம் தெரியுது, இது நிஜமா இல்லை நடிப்பா” என கேட்க அவள் பதில் பேசவில்லை அவனை பேயறந்ததை போல பார்த்து வைக்க

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.