(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

உங்களுக்கு இருக்கற பாசத்தால நான் எங்க சந்நியாசியா ஆயிடக்கூடாதுங்கற அக்கறையில 7 முறை காவேரிக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிப்பாட்டினீங்க, இதனால பாதிக்கப்பட்டது அவள்தான், அவளுக்கு நடந்தது கொஞ்ச நஞ்ச அவமானம் கிடையாது, யாருக்குமே இப்படி ஒரு அவமானம் நடக்க கூடாது, இதுவே ஒரு ஆம்பளைக்கு வந்தா எவ்ளோ பாதிக்கப்பட்டிருப்பான் அதேபோலதானே இவளும்

  

தெரிஞ்சோ தெரியாமலோ இவளோட கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன், இவளுக்கு நடந்த விசயம் எனக்குத் தெரியாது, தெரிஞ்சிருந்தா ஆரம்பத்திலேயே பிரச்சனையை சரிசெய்திருப்பேன் அப்ப முடியலை, இப்ப அவளுக்கு நடந்த எல்லா கஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் நான்தான் பொறுப்பாளி அதனால ஊர்க்காரங்க முன்னாடி காவேரிகிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என சொல்லியவன் காவேரியைப் பார்த்து கைகூப்பி மண்டியிட்டு

  

”என்னை மன்னிச்சிடு” என்றான்

  

ஊரே அமைதியாகிவிட்டது.

  

கொம்பனின் செயலால் ஊர்மக்கள் கூனிக்குறுகி நின்றார்கள், அதைக்கண்டதும் காவேரியின் கண்கள் கலங்கிவிட்டது, எந்த ஊர் தன்னை அவமானப்படுத்தியதோ இப்போது அதே ஊர் அமைதியாக கூனிக்குறுகி இருக்கவும் மெல்ல அவளின் மனகாயம் ஆறியது, தன் தந்தையைப் பார்த்தாள் அவரும் கம்பீரமாக நின்றார், ஒவ்வொரு முறை தனக்காக எத்தனை பேரிடம் கெஞ்சியிருப்பார், இப்போது அவர் கம்பீரமாக நிற்பதைக்கண்டு நிம்மதியானாள்.

  

கணக்குபிள்ளையோ காவேரியைப் பார்த்து மென்மையாக சிரித்தான், அதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது. மெதுவாக கொம்பனைப் பார்த்து மென்மையாக புன்னகை புரிந்தாள்.

  

”எழுங்க நான் உங்களை மன்னிச்சிட்டேன்” என்றாள். அதில் அவனும் அமைதியாகி எழுந்து நின்றான்.

  

கொம்பனின் தாய் தந்தையர் வந்தனர். அவர்களிடம் காவேரி

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.