வியந்தான்.
காவேரியும் நாய் இருக்கிறது என நினையாமல் அக்கம் பக்கம் பாராமல் அமைதியாக நடந்து வர கொம்பனோ அதிர்ந்தான், அந்த நாய்களின் உருமல் அதிகரித்தது. ஒவ்வொன்றும் எழுந்து அவள்மீது பாய்வது போல் தயாராக இருக்க கொம்பனுக்கும் நாய்களின் செயல் பயத்தை தந்தது.
”இந்த காவேரி வீணா பிரச்சனையை கொண்டு வர்றாளே கொழுப்பு, நாய்களை பார்த்தும் பயப்படாம வர்றதை பாரு, இதுங்க எல்லாம் சேர்ந்து அவள் மேல பாஞ்சா என்னாகும் கொஞ்சம் கூட பயமில்லையா இவளுக்கு, பார்க்கற எனக்கே பயம் வருதே” என மனதில் நினைத்தபடி பதட்டத்துடன் பார்க்க அவளோ நாய்களின் உருமலைக்கேட்டும் உள்ளுக்குள் பயந்தபடியே வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெதுவாக நடந்து கொம்பனின் பக்கம் வரவும் அந்த நாய்கள் பாயவும் சரியாக இருந்தது
சட்டென அவள் தன்னை காப்பாற்றிக் கொள்ள படுக்கையில் ஏறி படுத்துவிட அவளை காப்பாற்றும் பொருட்டு கொம்பன் அவளை அணைத்தபடி இருக்க அவன் மீதே நாய்கள் பாய்ந்தது, அவன் வளர்த்த நாய்களே அவனை கடிக்கவும் அலறினான். நாய்களை விரட்டினான், அவைகளும் விலகி சென்று பவ்யமாக நின்றது அவன் அலறலைக் கேட்டு அனைவருமே வந்து சேர்ந்தார்கள். கணக்குபிள்ளையோ
”நண்பா என்னடா ஆச்சி”
”நாய் கடிச்சிடுச்சி”
”நீ வளர்த்த நாய் எப்படிடா உன்னை கடிக்கும்”
”என்ன செய்றது கடிச்சிடுச்சி இங்க பாரு வலிக்குதுடா”
”சரி வா நாம ஆஸ்பிட்டல் போய் வரலாம்”
”சரி வா” என சொல்ல கொம்பனின் பெற்றோரோ