”இந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு இதப்பாரு கொம்பா நீ ஆசைப்பட்டது இந்த ஜென்மத்தில நடக்காது தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காம அவள்கிட்ட சரண்டர் ஆயிடு”
”யாரு நானா இந்த கொம்பனா”
”நிறுத்துடா பெரிசா வந்துட்ட கொம்பன் கொம்பன்னு அதான் உன் யோக்யதை தெருவரைக்கும் வந்துடுச்சே, ஊர்க்காரங்க முன்னாடியே மன்னிப்பு கேட்டாச்சி இன்னும் என்ன வைராக்யம் வேண்டிக்கிடக்கு விட்டுத்தள்ளு நண்பா” என சொல்ல கொம்பனோ பலமாக யோசிக்க நொந்துப் போன கணக்குபிள்ளையோ
”சரி கிளம்பு வீட்டுக்குப் போ ஊசி போட்டிருப்பாங்க கொஞ்சம் நேரம் ஓய்வெடு எல்லாம் சரியாயிடும்”
”நீ வரலையா வீட்டுக்கு”
”இல்லை எனக்கொரு வேலையிருக்கு நான் அதை முடிச்சிட்டு வரேன்”
”என்ன அது”
”வந்ததும் நீயே பார்த்து தெரிஞ்சிக்க இப்ப கிளம்பு போ” என சொல்ல கொம்பனும் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
கணக்குபிள்ளையோ கண்கள் மூடி சிவனை வேண்டிக் கொண்டு கண்கள் திறந்தவன் என்ன நினைத்தானோ விறுவிறுவென நடக்கலானான். அவன் இறுதியில் சென்று சேர்ந்த இடம் ஒரு மடம் கொம்பன் தனது குருவாக எண்ணிய சாமியாரிடம் சென்றான்.
அவரே கொம்பன் சந்நியாசி ஆகாமல் சம்சாரி ஆனதால் கோபம் கொண்டிருக்க அவரின் முன் பவ்யமாக நின்றான், சாமியாரோ குழப்பத்துடன் பார்க்க அவனோ மென்மையாக சிரிக்க அந்த சிரிப்பின் அர்த்தத்தை புரிந்துக் கொண்ட சாமியார் மனம் மகிழ்ந்தார்.