(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“கரக்ட்! கிளினிக்ல நடக்குறது எல்லாம் அவங்களுக்கு தான் தெரியும்!”

  

“உனக்கு அவங்களை தெரியுமா சத்யா?”

  

“தெரியாது சக்தி. ஏதாவது சாக்கு சொல்லி பேசலாம்!” சத்யா மொபைல் ஃபோனில் டாக்டர் கிருஷ்ணாவின் பெயரை சேர்ச் செய்தாள். அவரின் கிளினிக் விபரங்கள் வந்தது.

  

அதை படித்து விட்டு, “அஞ்சு மணிக்கு டோக்கன் தருவாங்களாம் சக்தி. அதுக்கு முன்னாடி போய் பேசலாம்,” என்றாள் சத்யா!

  

🌼🌸❀✿🌷

   

க்தியும், சத்யாவும் ஜீப்பில் கிருஷ்ணாவின் கிளினிக்கின் அருகே காத்துக் கொண்டிருந்தார்கள். ஐந்து மணி நெருங்கிய நேரம் ஒரு பெண்மணி கிளினிக்கின் பூட்டை சாவி கொண்டு திறப்பது தெரிந்தது.

  

“இவங்க தான் இங்கே வேலை செய்ற நர்ஸ்ன்னு நினைக்கிறேன்,” என்றாள் சக்தி.

  

“வா சக்தி, வேற யாராவது வரதுக்கு முன்னாடி சீக்கிரமா போய் பேசலாம்,” சத்யா வேகமாக ஜீப்பில் இருந்து இறங்கினாள்.

  

“நம்ம ப்ளான் மாதிரி அஹல்யா கல்யாணம் வச்சு பேசு சத்யா. பத்திரம்!”

  

“எல்லாம் பார்த்துக்கலாம். வா சக்தி!” சத்யா க்ளினிக்குள் சென்று விட, சக்தி அவளை பின் தொடர்ந்தாள்.

  

அரவம் உணர்ந்து எட்டிப் பார்த்தாள் அந்த பெண்மணி. சக்தி, சத்யாவை பார்த்ததும், மீண்டும் வேலையை தொடர்ந்துக் கொண்டே பேசினாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.