”நீங்க என்னை வெட்டி கொன்னாலும் பரவாயில்லைம்மா, அவள் இந்த வீட்ல இருக்க கூடாது” என்றான் மஹதிக்கு வேங்கையனின் மனநிலைமை புரிந்துப் போனது
”சரிங்க நான் கிளம்பறேன்” என மஹதி சொல்ல அதற்கு மங்களம் ஒப்புக் கொள்ளவில்லை.
”நீ எங்க கிளம்பற பேசாம இரு” என அதட்டிவிட்டு மகனிடம் நின்றார்
”என்னடா எதுக்கு இப்படி நடந்துக்கற”
”அம்மா உனக்கு விசயம் தெரியாது, இதோ நிக்கறாளே இவள் நீ நினைக்கற மாதிரி நல்லவள் கிடையாது” என சொல்ல மஹதி அதிர்ந்தாள்
”இதப்பாருங்க என் மேல உங்களுக்கு கோபம் இருக்கலாம் அதுக்காக என்னை தரக்குறைவா பேசாதீங்க, நான் நல்ல எண்ணத்தோடதான் இந்த வீட்டுக்குள்ள வந்தேன்”
”வந்தது சரி ஆனா இப்ப என்னாச்சி”
”என்ன செய்றது நானும் பொண்ணுதானே உங்க மேல ஆசைப்பட்டது தப்பா”
”தப்புதான் அடுத்தவ புருஷனை அதிலும் உன் தோழியோட புருஷனை காதலிக்கறது மகா தப்பு”
”தப்புன்னா அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறேன், தேவையில்லாம என்னோட குணத்தை குறை சொல்லாதீங்க”
”ஓஹோ கோபம் வருதா நல்லது கிளம்பு இங்கிருந்து” என சொல்ல அவளோ
”நான் எப்படி வந்தனோ அப்படிதான் போவேன்” என சொல்ல வேங்கையன் புரிந்துக் கொண்டான்